தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா 2ம் இடம் : வீணடிப்பதில் தமிழகம் 3-ம் இடம்

Updated : மே 28, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி :நாடு முழுவதும் 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிகம் தடுப்பூசி போட்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதுமத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஜனவரி 16ம் தேதியில் இருந்து 130 நாட்களில் 20 கோடியே 6
 தடுப்பூசி,இந்தியா 2ம் இடம் : வீணடிப்பு, தமிழகம்  3ம் இடம்

புதுடில்லி :நாடு முழுவதும் 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிகம் தடுப்பூசி போட்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது


மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஜனவரி 16ம் தேதியில் இருந்து 130 நாட்களில் 20 கோடியே 6 லட்சத்து 62 ஆயிரத்து 456 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 4 கோடியே 35லட்சத்து 12 ஆயிரத்து 863 பேர் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட 42 சதவீதம் பேர், 45 வயதுக்கு மேற்பட்ட 34 சதவீதம் பேருக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅமெரிக்க 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. பிரிட்டனில் 168 நாள்களில் 5.1 கோடி டோஸ், பிரேசிலில் 128 நாள்களில் 5.9 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படுகிறது. தடுப்பூசிகள் வீணாக்கும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீதமும், சட்டீஸ்கர் 30.2 மற்றும் தமிழகம் 15.5 சதவீத தடுப்பூசிகளை வீணடித்துள்ளது.


வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்



நாடு முழுவதும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 15.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது.ஒரு தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகிவிடும்.

அந்த வகையில் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதுஇது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசிகள் வீணாகும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்திருக்க மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் அதிகளவு வீணாக்குகின்றன. நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளன.

அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சட்டீஸ்கர் (30.2 சதவீதம்), தமிழகம் (15.5 சதவீதம்), ஜம்மு - காஷ்மீர் (10.8 சதவீதம்), மத்திய பிரதேசம் (10.7 சதவீதம்) உள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramouli - Mumbai,இந்தியா
27-மே-202118:15:32 IST Report Abuse
Chandramouli வீணடித்து இருக்க மாட்டார்கள் . வெளிமார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்று இருப்பார்கள்.
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
27-மே-202114:12:18 IST Report Abuse
Raman இந்த செய்திக்கு எதாவது சாட்சி இருக்கா? எதையாவது எடுத்து விடுவது உடனே சங்கிகள் ஊளையை ஆரம்பித்து விடும்... வேற என்ன புதுசு.. ஹா ஹா ஹா
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-மே-202112:15:09 IST Report Abuse
sankaseshan முதல் இடத்துக்கு வர முயற்சி செய்யப்படும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X