மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், ஜூன் 15 வரை நீட்டிப்பு

Added : மே 26, 2021 | |
Advertisement
சென்னை:தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:* தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்த கடைசி நாள், இம்மாதம் 10ம் தேதி முதல், 31 வரை இருப்பின், ஜூன் 15ம் தேதி செலுத்தலாம்* ஊரடங்கு காலத்தில், முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து, 60வது நாளாக

சென்னை:தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:

* தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்த கடைசி நாள், இம்மாதம் 10ம் தேதி முதல், 31 வரை இருப்பின், ஜூன் 15ம் தேதி செலுத்தலாம்

* ஊரடங்கு காலத்தில், முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து, 60வது நாளாக இருப்பின், மின் கணக்கீடு செய்ய வேண்டியவர்கள், 2019 மே மாத தொகையை உத்தேச கணக்கீடாக கருதி செலுத்தலாம்

* புதிய நுகர்வோர் அல்லது 2019 மே கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுவோர், நடப்பாண்டு மார்ச் கணக்கீட்டின்படி உத்தேச கட்டணத்தை செலுத்தலாம். இந்த கட்டணம், ஜூலை கணக்கீட்டில் முறைப்படுத்தப்படும்

* நடப்பாண்டு ஏப்., மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு, தாமத கட்டணத்துடன் கூடிய மின் துண்டிப்பின்றி, கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது

* சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த நுகர்வோர்களுக்கான கூடுதல் வைப்பு தொகை செலுத்த, ஜூன் 15ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X