ஜாதி ரீதியில் திசை திருப்பாதீர்கள்: கமல் வேண்டுகோள்

Updated : மே 27, 2021 | Added : மே 27, 2021 | கருத்துகள் (98)
Advertisement
சென்னை : 'புகார் தந்தும் பாலியல் தொல்லை விவகாரத்தில், போதிய கவனம் செலுத்தாத கல்வி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குலைகிறது. ஜாதி ரீதியில் பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்' என, கமல் கவலை தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:ஆசிரியரே, மாணவியரிடம் அத்துமீறிய, பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முன்னரே புகார் அளித்தும்,
PSBB, Kamal, Kamal Haasan

சென்னை : 'புகார் தந்தும் பாலியல் தொல்லை விவகாரத்தில், போதிய கவனம் செலுத்தாத கல்வி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குலைகிறது. ஜாதி ரீதியில் பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்' என, கமல் கவலை தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:ஆசிரியரே, மாணவியரிடம் அத்துமீறிய, பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முன்னரே புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம், இதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு, கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குலைக்கிறது.


latest tamil news



இதையடுத்து, மற்ற பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் புகார், அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்காக, தனி குழுவை நியமித்து, விசாரிக்க வேண்டும். கண்ணை இமை காப்பது போல், நம் கண்மணிகளை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளோம். 'ஆன்லைன்' வசதிகளை பிள்ளைகள் கையாளும்போது, பெற்றோர் கவனமுடனும், பிள்ளைகளின் அச்சத்தை போக்கி, துணையாகவும் இருக்க வேண்டும்.

இப்பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதிப் பிரச்னையாக்கும் முயற்சி, பல தரப்பிலும் நடக்கிறது. இது, குற்றவாளிகளுக்கே சாதகமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள், யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rishi - varanasi,இந்தியா
29-மே-202113:10:06 IST Report Abuse
rishi பெண் இனத்தின் பாதுகாவலர் இந்த கமலஹாசன், சகா நடிகையரை சகோதரிபோல் பார்ப்பவர் இந்த உலகநாயகன், ஸ்ரீவித்யா, கௌதமி,சிம்ரன் , பூஜாகுமார் இவருடைய உடன் பிறவாத சகோதரிகள்.... இன்னும் யாரையாவது விட்டிருந்தாள் மன்னிக்கவும்......
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
28-மே-202117:14:00 IST Report Abuse
meenakshisundaram நீ எதுக்கு இப்போ உள்ளார வாரே ?உன் ஜாதிக்கு நீ என்ன செஞ்சே ?பிறந்த ஜாதி .நாடு இவற்றை மறக்கலாமா ?
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
28-மே-202105:01:03 IST Report Abuse
Nepolian S ...இன்னுமா நீ கட்சி நடத்துற...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X