புதுடில்லி: உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில், முதலாவது இடத்தில் இருக்கும், 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்து, அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார், பெர்னார்டு அர்னால்ட் என்பவர்.
பிரெஞ்ச் ஆடம்பர குழுமமான, எல்.வி.எம்.எச்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், அதிபருமான, பெர்னார்டு அர்னால்ட் சொத்து மதிப்பு, 'போர்ப்ஸ்' கணிப்பின்படி, 13.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து, உலகின், 'நம்பர் ஒன்' பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு, 13.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும், அர்னால்ட் சொத்து மதிப்பு, 3.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'கிறிஸ்டியன் டியோர், பெண்டி' என, 70க்கும் மேற்பட்ட, பிரபல பேஷன் பிராண்டுகளை சொந்தமாக கொண்ட நிறுவனமாகும், எல்.வி.எம்.எச்., கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்தில் மட்டும் அர்னால்டுக்கு, 96.5 சதவீத பங்குகள் இருக்கின்றன. நடப்பு ஆண்டு ஜனவரியில், எல்.வி.எம்.எச்., குழுமம், அமெரிக்காவின் முன்னணிநகை நிறுவனமான, 'டிப்பானி அண்டு கோ' நிறுவனத்தை, 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இவ்வளவு விலையில் இதற்கு முன் எந்த ஆடம்பர பிராண்டும் கையகப்படுத்தப்பட்டதில்லை என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE