"உங்களைப்போல பாஜ எம்பிக்கள் அனைவரும் இருந்துவிட்டால் இந்தியா சீக்கிரம் முன்னேறி விடும்..."

Updated : மே 27, 2021 | Added : மே 27, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
இரண்டாண்டுகளுக்கு முன், மிகவும் சாதாரண இளைஞனான என்னை நம்பி ஓட்டளித்து, எம்.பி.,யாக்கிய என் தொகுதி மக்களுக்கு நேர்மையாக என் கடமைகளை செய்து, கடனை திருப்பிச் செலுத்தி வருகிறேன். எல்லாம் இறைவன் செயல்.-பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா'மருத்துவமனைகளில் படுக்கைகளை காலியாக வைத்து, ஏலம் விடுகின்றனர் என்ற விபரத்தை, உங்கள் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்திலேயே, தைரியமாக குரல்
பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா,  பாஜ, பொருளாளர், எஸ்.ஆர்.சேகர், தமிழக காங்., செய்திதொடர்பாளர், பீட்டர் அல்போன்ஸ், நாம் தமிழர்,ஒருங்கிணைப்பாளர், சீமான்,  சுப்ரமணியம் சுவாமி

இரண்டாண்டுகளுக்கு முன், மிகவும் சாதாரண இளைஞனான என்னை நம்பி ஓட்டளித்து, எம்.பி.,யாக்கிய என் தொகுதி மக்களுக்கு நேர்மையாக என் கடமைகளை செய்து, கடனை திருப்பிச் செலுத்தி வருகிறேன். எல்லாம் இறைவன் செயல்.-பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா


'மருத்துவமனைகளில் படுக்கைகளை காலியாக வைத்து, ஏலம் விடுகின்றனர் என்ற விபரத்தை, உங்கள் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்திலேயே, தைரியமாக குரல் கொடுத்தீர்களே... உங்களை போல, பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும் இருந்து விட்டால், இந்தியா வெகு சீக்கிரத்தில் முன்னேறி விடும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பெங்களூரு தெற்கு தொகுதி, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிக்கை


தடுப்பூசியை பற்றி, சில கட்சியினர் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்; மறுபுறம் சில ஊடகங்கள், தங்கள் பங்கிற்கு மக்களுக்கு தடுப்பூசி பற்றி தவறான புரிதலை, பொறுப்பற்ற முறையில் ஏற்படுத்தி வருகின்றன; இது கண்டனத்திற்குரியது.-மாநில பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'எப்ப தான் இவர்கள் திருந்துவரோ என்ற கவலை, நம் மக்களுக்கே வந்து விட்டது...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கைவெளிநாட்டு நிறுவனங்கள், மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை தர முடியாது என, கைவிரித்து விட்டன. மோடி அரசு, மாநிலங்களுக்கான கொள்முதலை, உடனடியாக செய்ய வேண்டும். இதற்காக நிதின் கட்கரி போன்ற மூத்த அமைச்சரை, தனி அமைச்சராக நியமித்து, மாநில நிர்வாகத்தோடு ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.-தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


latest tamil news
'மத்தியில், காங்., ஆட்சியில் இருந்தால் கூட, உங்களின் இந்த கோரிக்கையை ஏற்க மாட்டார்கள். எனவே உங்களின் அறிக்கை வீண் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கைஇலங்கையில், அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இருந்த தமிழ் புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி சேர்க்கப்பட்டு உள்ளது. இது, மிகவும் கண்டனத்திற்குரியது.-நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'இலங்கையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது... பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற, தமிழக முதல்வர் ஸ்டாலினின் தேச விரோத கோரிக்கையை, ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளக் கூடாது.-பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி


'ஸ்டாலினுக்கு எதிராக பாயத் துவங்கி விட்டீர்கள்; ஜோர். இனிமேல், தி.மு.க., பாடு கஷ்டம் தான்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி அறிக்கை

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-மே-202122:58:36 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\மோடி அரசு, மாநிலங்களுக்கான கொள்முதலை, உடனடியாக செய்ய வேண்டும்...\\ ........... மாநிலங்களே கொள்முதல் செய்வதற்கு அதிகாரம் வேண்டும் என்று முழக்கமிட்டது இவரது தலைவர் ராகுல் தானே ?? ... அவரை எதித்து பேசறாரே பீட்டர் ???
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
27-மே-202119:03:47 IST Report Abuse
spr இந்திய மக்களின் மேல் உண்மையிலேயே அக்கறையிருந்தால் அந்த மருந்து நிறுவனங்கள் அனைத்தையும் இந்திய அரசின் உடமையாக்க வேண்டும். அவர்கள் சொத்தைக் கைப்பற்ற வேண்டும் - இப்படிச் சொல்ல, கமலஹாசன் கட்சிக் கலவரத்தை அடக்குவதில் மும்முரமாக இருக்கிறார் தமிழர்களைக் காக்க இலங்கைக்குப் போகலாமா என்று சீமானும் வைகோவும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் வேலையில்லாமல் வேறு வழக்கு விசாரணை என்ற பயமுமில்லாமல் வீட்டில் இருக்கும் ப சி மற்றும் சின்ன குத்தூசி ராகூலுக்கு கூடத் தோன்றவில்லையா என்ன பொறுப்பில்லாத தலைவர்கள்
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
27-மே-202117:11:23 IST Report Abuse
sri அதென்ன பீட்டர் அல்போன்சுக்கு நிதின் கட்கரிமீது அப்படி ஒரு வாஞ்சை , நம்பிக்கை ? சுப்ரமணியம் சுவாமி இதையே முன்பு சொன்னதை வைத்து இவர் பேசுகிறாரா ? கட்கரி சாலை போக்குவரத்து அமைச்சர்தானே ? அதே பதவியில் முன்னர் இருந்த நம் டி பாலுவை ஒருங்கிணைப்பாளராக தில்லிக்கு அனுப்பி ஏற்பாடு செய்யலாமே ?
Rate this:
Rajasekaran - Chennai,இந்தியா
28-மே-202107:52:55 IST Report Abuse
Rajasekaranஇருந்தாலும் இவங்க கைகளில் கொடுக்கும் அளவுக்கு அறியாதவர்கள் அல்லர் இடத்தை காலி பண்ணி விட்டு வேற இடம் பார்க்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X