அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் அழகிரி விரைவில் சந்திப்பு ?

Updated : மே 27, 2021 | Added : மே 27, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: சென்னை செல்லவிருக்கும் கருணாநிதியின் மகன் அழகிரி விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார் என்று கூறப்படுகிறது .நீண்ட காலமாக கருணாநிதியின் மகன்களான முதல்வர் ஸ்டாலின், அழகிரி நேரில் சந்தித்து பேசாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மதுரைக்கு வந்த ஸ்டாலின் , அழகிரி வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு

சென்னை: சென்னை செல்லவிருக்கும் கருணாநிதியின் மகன் அழகிரி விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார் என்று கூறப்படுகிறது .latest tamil newsநீண்ட காலமாக கருணாநிதியின் மகன்களான முதல்வர் ஸ்டாலின், அழகிரி நேரில் சந்தித்து பேசாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மதுரைக்கு வந்த ஸ்டாலின் , அழகிரி வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை.

இந்நிலையில் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது . நாளை (மே28 ) பெயர் சூட்டு விழா நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக இந்த விழாவுக்கு குறிபிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக சென்னை செல்லும் அழகிரி ஈஞ்சம்பாக்கம் பங்களாவில் தங்குகிறார்.


latest tamil news
கருணாநிதி பிறந்த நாள் விழா


இந்த விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஸ்டாலின் ,அழகிரி சந்திப்பு இன்று சென்னையில் நடக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவறும் பட்சத்தில் அவர்களது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்தநாள் வரும் ஜூன் 3 ம் தேதி வரவுள்ளது. இதனையொட்டி அழகிரி கருணாநிதியின் வீட்டிற்கு செல்வார். இங்கு இருவரது சந்திப்பு நடக்கலாம் அல்லது அதற்கு முன்னதாகவே அழகிரி கோட்டைக்கோ, அல்லது வீட்டிற்கோ சென்று ஸ்டாலினை சந்திப்பார் என கூறப்படுகிறது.

இருவரது சமரச ஏற்பாட்டு விஷயத்தில் கருணாநிதியின் மகள் செல்வி மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Chennai,இந்தியா
28-மே-202107:46:00 IST Report Abuse
Rajasekaran பங்காளிகளுக்குள் மோதலும் , காதலும் , ரொம்ப சகஜமப்பா ஆயிரமா , சில லட்சமா , விட்டுக்கொடுக்க ?
Rate this:
Cancel
28-மே-202106:45:06 IST Report Abuse
மனுநீதி தேர்தலுக்கு முன் இந்த நாடகம் நடந்திருந்தால் தமிழ்நாடு தப்பித்திருக்கும்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-மே-202122:27:41 IST Report Abuse
DARMHAR just because his younger brother became chief minister Alagiri would have gone to congratulate him
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X