கலெக்டர் அவமதித்து விட்டதால் விருப்ப ஓய்வு: அமைச்சருக்கு 'டீன்' சுகந்தி ராஜகுமாரி கடிதம்

Updated : மே 27, 2021 | Added : மே 27, 2021 | கருத்துகள் (79) | |
Advertisement
மதுரை: 'கலெக்டர் அவமதித்து விட்டதால் 30 ஆண்டுகால பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளேன்' என்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி டீனாக மாற்றப்பட்டு, விடுமுறையில் சென்றுள்ள டீன் சுகந்தி ராஜகுமாரி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது: மே 19ல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பொறுப்பேற்றேன். முன்னதாக
கலெக்டர், அவமதிப்பு, விருப்ப ஓய்வு, அமைச்சர், டீன், சுகந்தி ராஜகுமாரி,

மதுரை: 'கலெக்டர் அவமதித்து விட்டதால் 30 ஆண்டுகால பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளேன்' என்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி டீனாக மாற்றப்பட்டு, விடுமுறையில் சென்றுள்ள டீன் சுகந்தி ராஜகுமாரி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: மே 19ல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பொறுப்பேற்றேன். முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பணியாற்றினேன். மே 18 மாலையில் கன்னியாகுமரியிலிருந்து இடமாற்றம் வந்தது. இரவில் மதுரை அழகர்கோவிலில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கி மறுநாள் காலை பணியில் சேர்ந்தேன். விருதுநகரில் குடியிருப்பு வசதி இல்லாததால் மாலை 4:00 மணிக்கு எனது வீட்டுக்கு வந்தேன். மாலை 5:29 மணிக்கு போனில் அழைத்த நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த், கலெக்டர் என்னை சந்திக்க வேண்டும் என கூறியதாக கூறினார்.

மாலை 5:31 மணிக்கு கலெக்டரை போனில் தொடர்பு கொண்ட போது 'அவசர சந்திப்பா அல்லது பேரிடர் மேலாண்மை குறித்து பேசவேண்டுமா' எனக் கேட்டேன். 'பணியில் சேர்ந்த அன்று மரியாதை நிமித்தம் தன்னை சந்திக்க வேண்டும்' என கலெக்டர் தெரிவித்தார்.

மதுரையில் இருப்பதாலும், டிரைவர் வீடு திரும்பியதாலும் தொடர் மழை பெய்ததாலும் மறுநாள் வந்து சந்திப்பாக கலெக்டரிடம் கூறினேன். நிலைய மருத்துவ அலுவலர், கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதால் ஏதாவது அவசரம் என்றால் உடனடியாக தொடர்பு கொள்வார் என்றும் கூறினேன். ஆனால் இரவு 8:00 மணிக்கு, மரியாதை நிமித்தம் தன்னை சந்திக்க வேண்டுமென கலெக்டர் கட்டாயமாக வற்புறுத்தினார்.


latest tamil news


ஐகோர்ட்டில் சீனியர்வக்கீலாக பணிபுரியும் எனது கணவர் ஐசக் மோகன்லால் கலெக்டரிடம் பேசிய போது, 'அவசரப் பணி என்றால் நானே காரில் அழைத்து வருகிறேன். மரியாதை சந்திப்பு என்றால் மறுநாள் வந்து சந்திப்பார்' என்று கூறியுள்ளார்.

மறுநாள் (மே 20) காலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் முறைகேடு குறித்த விசாரணையில் ஈடுபட்டதால் அந்த பணி முடிந்ததும் கலெக்டரை சந்திக்க முடிவு செய்தேன். ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த நபர் என்னிடம் நோட்டீஸ் கொடுத்தார். அதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் 3:00 மணிக்கு நடத்திய வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொள்ளாததற்காக உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

மே 19 மாலை 4:00 மணி வரை மருத்துவமனையில் இருந்த போது வீடியோ கான்பரன்சிங் நடப்பதாக எந்த தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக கலெக்டர் எனக்கு போனில் தெரிவிக்கவும் இல்லை. விதி 18 ன் படி அரசு பணியாளர் நடத்தை விதிகளை நான் மீறியதாக எப்படி சொல்ல முடியும்.

பேசிய போது என் கணவர் மிரட்டியதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். என் கணவர் கலெக்டரிடம் மிகவும் மதிப்பளித்தே பேசினார். மறைமுக மிரட்டலோ அரசியல் செல்வாக்கு இருப்பதாகவோ தெரிவிக்கவில்லை. அவசரப்பணி என்றால் காரில் வருவதாக கணவர் கூறினார். அவசரப்பணி அல்லது பேரிடர் மேலாண்மை என எதையும் கலெக்டர் கூறவில்லை.

கொரோனா போன்ற சூழ்நிலையில் கலெக்டர் எங்களைப் போன்ற டாக்டர்களின் சேவையை பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக அவமதித்து, மனரீதியாக துன்புறுத்தி விட்டார். கலெக்டரின் இத்தகைய செயலால் தொடர்ந்து டீனாக பணியாற்ற முடியாத சூழலில் விருப்ப ஓய்வு பெற நினைக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sindar - Madurai ,இந்தியா
28-மே-202109:59:21 IST Report Abuse
Sindar Not only here. In most if the offices, it's happening, doctors are teased by the senior officials, inspire of their hard work. Doctors are bothered about patient and treatment while the officers are concerned with only statistics and reporting. Professionals should be used in their profession mainly.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
28-மே-202102:56:40 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே Aisakku ஐசாக் கலெக்டரிடம் திமிர் காட்டும் பெண் நாளை எப்படி சக பணியாளர்களை மரியாதையோடு நடதுவா? இவளின் ராஜினாமா ஏறுகொள்ளபடவெண்டும் அந்த பணிக்கு உண்மையா வேலை பார்க்கும் ஆளை போட வேண்டும்
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
28-மே-202102:11:02 IST Report Abuse
Murugan மக்கள் உயிரைவிட இவருக்கு ஈகோ பெரிதாகிவிட்டதா? இவர் எல்லாம் அரசியல் பலத்தினால் பதவி உயர்வு அடைந்து இருப்பார். அதுவும் மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் அது இவரிடம் இல்லை. மேலும் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் காரணம் கண்டு பதுங்குகிறார்.மேலும் கணவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கேட்கவா வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X