அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல்... புரசல்... அரசியல்: அரசு வழக்கறிஞர்கள்- தி.மு.க., அதிரடி முடிவு

Updated : மே 27, 2021 | Added : மே 27, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
ஆட்சி மாறினா, தமிழகம் முழுக்க அரசு வழக்கறிஞர்களை புதுசா நியமிக்கிறது வழக்கம். கூட்டணி கட்சி வழக்கறிஞர்களும் இந்தப் பதவியை பிடிக்க முயற்சிப்பாங்க... அந்த மாதிரி, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் என, எல்லா கட்சியைச் சேர்ந்தவங்களும், அரசு வழக்கறிஞர்களாக முட்டி மோதுறாங்களாம்...ஆனா, சொந்தக் கட்சியிலயே பதவியை பிடிக்க போட்டி அதிகமா
அரசல்_புரசல்_அரசியல், அரசு வழக்கறிஞர்கள், தி.மு.க., திமுக, கிருஷ்ணசாமி,

ஆட்சி மாறினா, தமிழகம் முழுக்க அரசு வழக்கறிஞர்களை புதுசா நியமிக்கிறது வழக்கம். கூட்டணி கட்சி வழக்கறிஞர்களும் இந்தப் பதவியை பிடிக்க முயற்சிப்பாங்க... அந்த மாதிரி, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் என, எல்லா கட்சியைச் சேர்ந்தவங்களும், அரசு வழக்கறிஞர்களாக முட்டி மோதுறாங்களாம்...ஆனா, சொந்தக் கட்சியிலயே பதவியை பிடிக்க போட்டி அதிகமா இருக்கறதால, அரசு வழக்கறிஞர்களாக, தி.மு.க.,வினரையே தமிழகம் முழுக்க நியமிக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்...!


‛அரசியல் பேசணும்னா முதல்ல ஊசி போடுங்க!'


latest tamil news


சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது சம்பந்தமா விவாதிச்சு, கட்சியை அடுத்தகட்டமா எப்படி கொண்டு போறதுன்னு ஆலோசனை நடத்த, நிர்வாகிகள் கூட்டத்தை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டியிருந்தாரு... அப்ப, நிர்வாகிகள்கிட்ட, தடுப்பூசி போட்டீங்களான்னு கேட்டிருக்காரு... பலரும் இல்லைன்னு சொல்ல, ‛முதல்ல எல்லோரும் தடுப்பூசி போட்டு, அதை எனக்கு, ‛வாட்ஸ்-ஆப்' மூலமா தகவலா அனுப்புங்க'ன்னு, கிருஷ்ணசாமி சொல்லிட்டாராம்...!


நிதி கொடுத்து ‛வளைக்க' முயற்சி!


மணல் மனிதர்னு அடையாளப்படுத்தப்பட்ட சேகர் ரெட்டி, கொரோனா நிதி கொடுத்த விவகாரமே, புகைச்சலா இருக்கும்போது, விழுப்புரம் மாவட்டம், தளவாணூரில் தடுப்பணை கட்டினவரும் நிதி கொடுத்திருக்காரு... கட்டி முடிச்ச மூணு மாசத்துக்குள்ளேயே அந்த அணை தண்ணியில அடிச்சுகிட்டுப் போய், அது தொடர்பா, பொதுப் பணித் துறை அதிகாரிகளெல்லாம், ‛சஸ்பெண்ட்' செய்யப்பட்டாங்க... அந்த நிறுவனத்தின் மேல, அரசு தரப்புல தீவிர விசாரணை நடத்த வேண்டியிருக்கும் சூழலில், அந்த நிறுவனம் சார்பில் நிதி கொடுத்ததும், அதை முதல்வர் ஸ்டாலின் வாங்கியதும் சரியில்லைன்னு, தலைமை செயலக வட்டாரத்துல பேசிக்கிறாங்க...!

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Raghunath - singapore,சிங்கப்பூர்
27-மே-202121:04:43 IST Report Abuse
S Raghunath Sun tv group என்ன கொடுத்தது
Rate this:
Ganesh Maldives - maalththeevugal ,மாலத்தீவு
27-மே-202122:57:43 IST Report Abuse
Ganesh Maldivesஅல்வா......
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்KALANITHI MARAN PERSONALLY HANDED OVER CHECK FOR TEN CRORES...
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
27-மே-202123:44:51 IST Report Abuse
John Millerநீ வாயை பிளா. வாழைப்பழத்தை கொடுப்பார்கள்....
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
28-மே-202111:57:48 IST Report Abuse
Dr. Suriyaஞானதேசிகரின் பெயரை கெடுக்காதே......
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
27-மே-202121:01:31 IST Report Abuse
BASKAR TETCHANA இதிலிருந்து என்ன தெரிகிறது.பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்.
Rate this:
Dharma - Madurai,இந்தியா
28-மே-202108:50:41 IST Report Abuse
Dharmaஇவங்கிய நிதி கொடுக்குறங்கியலா, இல்ல லஞ்சம் கொடுக்குறங்கியலா?...
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202120:33:21 IST Report Abuse
ram மிகச்ரியாகத்தான் காய் நகர்துரீங்க.. உங்களோட அனைத்து ஊழலும் நாட்டுக்கு தெரியக்கூடாதுன்னு உங்களோட நடவடிக்கை சூப்பர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X