சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கனியும் காலம் விஞ்ஞானி கையில்!

Added : மே 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தக்காளி எப்போது பழுக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் வித்தையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தக்காளியின் குறிப்பிட்ட ஒரு மரபணுவை திருத்துவதன் மூலம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் இதை சாதித்துள்ளனர்.தக்காளி காயாக இருப்பது முதல், சதைப் பற்றுடன் மெல்லக் கனிந்து பழமாவது வரை பல தன்மைகளை தருவது, 'பிளாஸ்டிட்' என்றபுரதத்திற்கு பெரும் பங்கு உண்டு.இந்த ஒற்றை
 கனியும் காலம் விஞ்ஞானி கையில்!

தக்காளி எப்போது பழுக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் வித்தையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தக்காளியின் குறிப்பிட்ட ஒரு மரபணுவை திருத்துவதன் மூலம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் இதை சாதித்துள்ளனர்.

தக்காளி காயாக இருப்பது முதல், சதைப் பற்றுடன் மெல்லக் கனிந்து பழமாவது வரை பல தன்மைகளை தருவது, 'பிளாஸ்டிட்' என்றபுரதத்திற்கு பெரும் பங்கு உண்டு.இந்த ஒற்றை புரதத்தை கண்டுபிடித்ததன் மூலம், தக்காளி பழுக்கும் தன்மையை கட்டுப்படுத்தலாம்.

அதாவது, விரைவாக பழுக்கவோ அல்லது மெதுவாக கனியவோ செய்யலாம்.இதனால், நிலத்தில் இருந்து கிளம்பி, பெட்டி களில் அடுக்கப்பட்டு, கிடங்குக்கு போய், பிறகு கடைகளை அடைந்து, அங்கிருந்து வீடுகளிலுள்ள குளிர்சாதன பெட்டிகளை அடைகிறது தக்காளி.இந்த பயணத்தில், எப்போது அது கனிந்து பழமாக வேண்டும் என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடியும்.

உலகெங்கும் சமையலுக்கு மையமாக இருக்கும் தக்காளி கனியும் காலத்தை கட்டுப்படுத்த முடிந்தால், விளைந்த தக்காளி வீணாவதை தடுக்கலாம்.மேலும், இதே நுட்பத்தை, பிற காய், கனிகளுக்கும் பயன்படுத்த முடியும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துரை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
02-ஜூன்-202119:31:33 IST Report Abuse
Murugan தொழில் நுட்ப முறையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் காய் கனிகள் நல்லது இல்லை என பல ஆண்டுகளுக்கு பிறகு நாம் மறுபடியும், இயற்கையாக வேண்டுமென ஒரு போராட்டத்தை செய்வோம் .
Rate this:
G.Kirubakaran - Doha,கத்தார்
09-ஜூன்-202112:52:34 IST Report Abuse
G.Kirubakaranஎந்த பயிரும், காய் கனிகளும் அதனுடைய ,இயறகையான போக்கிலே தான் உத்பத்தி ,பழுக்க வேண்டும். இதனை மீறிய எந்த ஆராய்ச்சியும், உரிக்கும், உடலுக்கும் கேடு தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X