தமிழ்நாடு

பரிதவிப்பு: ஆக்சிஜன் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள்...கடலூர் மாவட்ட மருத்துவமனைகளின் அவலம்

Added : மே 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார் மாவட்டத்தில் பாதிப்பு தினமும் ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்து விட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.கடந்த மாத இறுதியில் 1000 பேர் மட்டுமே சிகிச்சையில்இருந்த நிலையில், தற்போது, வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் உட்பட 8,000 பேர் வரை சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர்.கடலுார்
 பரிதவிப்பு: ஆக்சிஜன் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள்...கடலூர் மாவட்ட மருத்துவமனைகளின் அவலம்

கடலுார் மாவட்டத்தில் பாதிப்பு தினமும் ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்து விட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாத இறுதியில் 1000 பேர் மட்டுமே சிகிச்சையில்இருந்த நிலையில், தற்போது, வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் உட்பட 8,000 பேர் வரை சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சிதம்பரம்,விருத்தாசலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள் என 35 இடங்களில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதவிர, மாவட்டத்தில் 7க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 தனிமைப்படுத்தும் முகாம்களில் சாதாரண பாதிப்பு உள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆக்சிஜன் வசதிகள் போதுமானதாக இல்லாததால், மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு, உயிர்பலி அதிகரித்து வருகிறது.திணறும் மாவட்ட நிர்வாகம்மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், அரசுமருத்துவமனைகளில் 661, தனியார் மருத்துவமனைகளில் 100 என,761 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன.

ஆனாலும், தற்போது பரவும் தொற்று, மூச்சுத்திணறலைஏற்படுத்துவதால், அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் முழுமையாகநிரம்பி விடுகின்றன. இதனால், மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், மாவட்ட நிர்வாகம் திணறிவருகிறது.ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஒரு சிலிண்டரில் இருவருக்குசிகிச்சை, வராண்டாவில் படுக்க வைத்து ஆக்சிஜன் கொடுப்பது என,எவ்வளவோ முயற்சி செய்தும், சுகாதாரத் துறையால்சமாளிக்க முடியவில்லை. இதனால், கொரோனா பாதித்தோர் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இதுதவிர நெய்வேலி மருத்துவமனையில் 92 ஆக்சிஜன் படுக்கைவசதிகள் இருந்தும், அப்பகுதியில் பாதித்தவர்களைக் கூட அவர்களால்சமாளிக்க முடியாமல், மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

தவிக்கும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும்இறந்தவர்களின் குடும்பத்தினரிடமிருந்து எழும் அழுகுரல் தொடர்ந்து கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.நோயாளிகள் பரிதவிப்புகடலுார் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்சில் வந்து,ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பக்கத்து மாநிலமான புதுச்சேரிமருத்துவமனைகளிலும் இடமில்லை.மாவட்டத்தில் தனியார்மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் நிலையில்,அங்கும் ஆக்சிஜன் படுக்கை கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியேகிடைத்தாலும் ஒரு சில மருத்துவமனைகளில், பணம் மட்டுமேபிரதானமாக இருப்பதால், ஏழைகள் பலரும் தவியாய் தவிக்கின்றனர்.

சிகிச்சையின்போது நோயாளிகள் உயிரிழந்தாலும் சில தனியார் மருத்துவமனைகள், பணத்தை கட்டினால்தான் என, கறார் காட்டும் சம்பவங்களும் நடக்கிறது.முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை பல மருத்துவமனைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்ற புகாரையடுத்து, 22 மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்து மருத்துவமனைகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.நோய் பரவல் மையம்கடலுார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும்அவருடன் இருப்பவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்உலா வருகின்றனர். வெளியே வந்து பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.இதனால், மருத்துவமனைக்கு சாதாரண நோய்க்கு வருபவர்கள் கூடதொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.பரவலுக்கு காரணம்தொற்று பாதித்தவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவதால் தொற்று மேலும் பரவி வருகிறது. மேலும், ஆரம்பத்தில் அரசு அதிரடியாக மேற்கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டுதல், கண்காணிக்கப்பட்ட பகுதி என, தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தில், பெரு நகரங்களுக்கு இணையாக பாதிப்புஎண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், கொரோனாதனிமைப்படுத்தும் முகாம்கள் அதிகரிக்கவும், கூடுதல் ஆக்சிஜன்வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்களையும் போர்க்காலஅடிப்படையில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதால், 850க்கும் மேற்பட்டகிராம பகுதிகளை உள்ளடக்கிய கடலுார் மாவட்டத்தில் தொற்று பரவாமல்தடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்டநிர்வாகம், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளைதீவிரப்படுத்தினால் மட்டுமே கொரோனா பாதிப்பில்இருந்து பாதுகாக்க முடியும்.படுக்கை இருந்தும் ஆக்சிஜன் இல்லைமாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு முக்கிய மையமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையாமருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில் 320 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுதும் இருந்தும் கொரோனா பாதித்தோர் வருவதால், கூடுதலாக 250 ஆக்சிஜன்படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இருந்து ஆக்சிஜன் கிடைக்காமல் கூடுதல் படுக்கை வசதிகள் இருந்தும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மே-202108:46:15 IST Report Abuse
ஆப்பு கேட்டதெல்லாம் கிடைக்குதுன்னு மத்திய அரசுக்கு தமிழஜ அரசு பாராட்டு தெரிவிக்குது. இங்கே என்னடான்னா கடலூரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு. அவலம். வர்ர ஆக்சிஜனையெல்காம் எங்கே பதுக்கி விக்குறாங்களோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X