பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு

Added : மே 27, 2021
Share
Advertisement
கூடலுார்:முதுமலை புலிகள் காப்பத்தில், இரண்டாம் கட்டமாக, வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், உள்வட்டம், வெளிவட்டம் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி, இரண்டு கட்டமாக நடக்கிறது. நடப்பாண்டு உள்வட்ட பகுதியில், மே 20 முதல் 25 வரை கணக்கெடுப்பு பணி நடந்தது. இரண்டாவது கட்டமாக, வெளி
 முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு

கூடலுார்:முதுமலை புலிகள் காப்பத்தில், இரண்டாம் கட்டமாக, வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், உள்வட்டம், வெளிவட்டம் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி, இரண்டு கட்டமாக நடக்கிறது. நடப்பாண்டு உள்வட்ட பகுதியில், மே 20 முதல் 25 வரை கணக்கெடுப்பு பணி நடந்தது. இரண்டாவது கட்டமாக, வெளி வட்டத்திற்கு உட்பட்ட சிங்காரா, சீகூர், தெங்குமரஹடா வனச்சரகங்களில், வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.இதற்காக வனப்பகுதி, 38 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வனச்சரகர்கள் காந்தன், முரளி, ரமேஷ் தலைமையில், ஒரு பிரிவுக்கு தலா மூன்று பேர் வீதம், 114 வன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வனவிலங்குகள் குறித்த விபரங்களை, டேட்டா ஷீட், மொபைல் போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இப்பணிகள், 1ம் தேதி நிறைவு பெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X