ராயபுரத்தில் கொரோனா சிகிச்சை மையம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராயபுரத்தில் கொரோனா சிகிச்சை மையம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

Updated : மே 28, 2021 | Added : மே 27, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை-சென்னை, ராயபுரம் மண்டலத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 100 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்தில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளியில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், தடுப்பூசி
 ராயபுரத்தில் கொரோனா சிகிச்சை மையம்  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை-சென்னை, ராயபுரம் மண்டலத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 100 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்தில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளியில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, பாரதி மகளிர் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 100 படுக்கைகள் கொண்ட, கொரோனா சிகிச்சை மையத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.

இதில், 40 படுக்கைகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு அனுமதிக்கப்படுவோரின் உடல்நிலை குறித்த விபரத்தை, அவர்களின் உதவியாளர்கள் அறிந்து கொள்ள, எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்ல, இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து பொருட்கள், சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பில் வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X