பொது செய்தி

தமிழ்நாடு

தள்ளுவண்டியில் முட்டை விற்பனை ஊரடங்கால் பாதித்தோருக்கு அனுமதி

Added : மே 27, 2021
Share
Advertisement
சென்னை- சென்னையில், 800 தள்ளுவண்டிகளில் முட்டை வியாபாரம் செய்வதற்கு, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், சென்னை மாநகராட்சி தோட்டக்கலைத் துறை வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை- சென்னையில், 800 தள்ளுவண்டிகளில் முட்டை வியாபாரம் செய்வதற்கு, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், சென்னை மாநகராட்சி தோட்டக்கலைத் துறை வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அவித்த முட்டை சாப்பிட வேண்டும் என, மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஊரடங்கால், இறைச்சி, மீன், முட்டை கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, சென்னையில் முதற்கட்டமாக, 800 தள்ளுவண்டிகளில் முட்டை வியாபாரம் செய்வதற்கு, மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முட்டை வியாபாரம் செய்யும் அனுமதியை, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வழங்கி உள்ளார்.ஏற்கனவே முட்டை வியாபாரத்தில் ஈடுபட்டோருக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நியாயமான விலையில் காலை, 6:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை மட்டுமே, முட்டை விற்பனை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X