பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கொலைக்கு ஆதரவா தமிழகம்?

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சுந்தாசா, கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்:தமிழக கட்சிகளுக்கு, மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் நினைவுக்கு வருமோ இல்லையோ, ராஜிவ் படுகொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் மறக்கவே மறக்காது!முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை, தமிழக
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

சுந்தாசா, கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்:

தமிழக கட்சிகளுக்கு, மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் நினைவுக்கு வருமோ இல்லையோ, ராஜிவ் படுகொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் மறக்கவே மறக்காது!

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை, தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. அந்த சம்பவம், இந்தியாவின் இறையாண்மைக்கு, அன்னிய சக்திகள் விடுத்த பெரும் சவால்.தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், ராஜிவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேருக்கு விடுதலை அளிக்க, ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற கட்சி, ஆட்சி அமைக்கும் போது, தமிழகத்தில் உள்ளோர் அனைவரும், விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பிம்பம் படிந்து விடுகிறது.'தமிழர்' என்ற போர்வையில், அவர்களுக்கு விடுதலை கோரி பெரும்பான்மையான கட்சிகள் போராடி வருவதால், பயங்கரவாதத்திற்கு தொடர் ஆதரவு கொடுத்து வரும் மாநிலம், தமிழகம் என்ற பார்வையும் ஏற்பட்டு விட்டது.

சினிமா, சமூக வலைதளம், 'டிவி' மட்டுமின்றி இப்போது, 'வெப்சீரிஸ்' வழியாகவும், பயங்கரவாதிகளுக்கு, தமிழர்கள் ஆதரவளிப்பர் என, கிண்டல் செய்வது தொடர்கிறது.விடுதலை புலிகள் அமைப்பு, தமிழகத்தில் பத்மநாபா கொலை உட்பட, பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது.ஆயுதம், போதை மருந்து கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதால், பல நாடுகளில், அந்த அமைப்பின் மீது இன்னமும் தடை உள்ளது.


latest tamil news


பயங்கரவாதத்திற்கு எதிராக உலகமே திரண்டு நிற்கும் நிலையில், நம் நாட்டின் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்தால், அது தவறான முன்னுதாரணமாக அமையும்.தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தான், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களே தவிர, தமிழக மக்கள் அல்ல.கொலையாளிகளை விடுவிக்க கோருவதை விடுத்து, இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு, இங்கு வாழ்வாதாரத்திற்கு தடுமாறும் அகதி முகாமில் முடங்கியுள்ளோருக்கு உதவிகள் செய்ய, அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
29-மே-202100:39:29 IST Report Abuse
PRAKASH.P 2laksh people ed .. no one punished . Why only than these seven.. let them live their remaining life outside jail
Rate this:
Cancel
Mani kumar - Texas,யூ.எஸ்.ஏ
28-மே-202123:26:03 IST Report Abuse
Mani kumar உண்மையான குற்றவாளி சாமி ஆட்சி கலைப்பு என்று கதரி கொண்டிருக்கிறான்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
29-மே-202101:44:45 IST Report Abuse
Srinivas....///உண்மையான குற்றவாளி சாமி ஆட்சி கலைப்பு என்று கதரி கொண்டிருக்கிறான்/// உண்மையான கருத்து. ஆனால் அவன் கும்பல் இதைப்பற்றி விமர்சனம் சொல்லவே மாட்டானுங்க. அடிமைகொள்ளைக்கூட்டம் கேடுகெட்ட கயவனுங்க கும்பல்......
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
28-மே-202122:24:31 IST Report Abuse
Anbuselvan All seven acquists will have to sp their remaining part of life in jail only. No President will pardon ers of a PM in his own soil
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X