கோவிட் பரவியது எப்படி? விசாரணைக்கு பைடன் உத்தரவு!

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
வாஷிங்டன்: சீனாவில் உள்ள ஆய்வு மையத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவிஉள்ளதாக புதிய அறிக்கை வெளியானதையடுத்து, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தும்படி உளவு அமைப்புகளுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுஉள்ளார்.சீனாவின் வூஹான் நகரில், 2019 டிச.,ல் முதன் முதலில் கோவிட் வைரஸ் தென்பட்டது. இதுவரை உலகெங்கும் இந்த வைரசால், 16.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 35

வாஷிங்டன்: சீனாவில் உள்ள ஆய்வு மையத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவிஉள்ளதாக புதிய அறிக்கை வெளியானதையடுத்து, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தும்படி உளவு அமைப்புகளுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுஉள்ளார்.



latest tamil news


சீனாவின் வூஹான் நகரில், 2019 டிச.,ல் முதன் முதலில் கோவிட் வைரஸ் தென்பட்டது. இதுவரை உலகெங்கும் இந்த வைரசால், 16.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 35 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.வூஹானில் உள்ள கடல் விலங்குகள் சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக சீனா கூறி வருகிறது.ஆனால், 'வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து தான், இது பரவி உள்ளது' என, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கூறி வருகின்றன.

இது தொடர்பாக விசாரித்த உலக சுகாதார அமைப்பு, 'வூஹான் ஆய்வு மையத்தில் ஏற்பட்ட விபத்தால், வைரஸ் பரவியதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறிஉள்ளது. இதை உலக நாடுகள் ஏற்கவில்லை.வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தின. 'பரவலுக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.சமீபத்தில் ஒரு அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.அதில், 'வூஹான் வைரஸ் ஆய்வு மையத்தில் பணியாற்றிய பல ஆராய்ச்சியாளர்கள், 2019ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


இதையடுத்து, வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை இரட்டிப்பாக்கும்படி, உளவு அமைப்புகளுக்கு, ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதனால், விசாரணையை இரட்டிப்பாக்கும்படி, உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.விசாரணை அறிக்கையை, 90 நாட்களுக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.வைரஸ் பரவலுக்கான முழு காரணம் தெரிய ஒத்துழைக்கும்படி, நட்பு நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு நெருக்கடி தருவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இவனுக்கும் நம்ப PKதான் அட்வைஸராக இருப்பானோ ? அதே ட்ராமா அதே திருட்டுத்தனம் ..அதே மூர்க்கத்தனம்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-மே-202113:44:30 IST Report Abuse
Sriram V Stop all Chinese import
Rate this:
Cancel
lana -  ( Posted via: Dinamalar Android App )
28-மே-202113:20:05 IST Report Abuse
lana இத தான பழைய அதிபர் ட்ரம்ப் சொன்னார் அப்ப நொட்ட சொன்னிங்க. இவர் அமெரிக்கா வின் சுடலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X