அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சிக்கலைப்பு சுவாமி எச்சரிக்கை ; தனியார் பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை தேவை

Updated : மே 29, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (260)
Share
Advertisement
''பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறினார்.அவர் அளித்த பேட்டி:சென்னை, கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், வணிகவியல் மற்றும் கணக்குப்

''பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறினார்.latest tamil newsஅவர் அளித்த பேட்டி:சென்னை, கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது.


சமூக வலைதளம்இதைத் தொடர்ந்து, காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தும், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.பள்ளியில் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து, தீவிர விசாரணை நடப்பது வரை எதுவும் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு எதிராக வன்மத்தோடு, சிலர் திராவிடர் கழக முத்திரையுடன், சமூக வலைதளங்களில் வேகமாக இயங்கி வருவதும், அதை வைத்து, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது போல, ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அது தான் தவறு.

நீண்ட காலத்துக்குப் பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது. பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெற்று வரவில்லை. அதனால், எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆட்சியை கலைக்கும் சூழல் உருவாகும். அரசு, இந்த விஷயத்தில் உள்நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க நினைத்தால், ஆட்சியை கலைப்பதை தவிர, வேறு வழியில்லை. கட்டாயம் அதை செய்து காட்டுவேன்.


ஒரு தலைபட்சம்தி.மு.க.,வுக்கு பின்புலமாக இந்த விஷயத்தில், தி.க., தான் செயல்படுகிறது. தி.மு.க., ஆட்சி மிக சுலபமாக ஏற்பட்டு விடவில்லை. ஸ்டாலினின் மனைவி துர்காவின் கடவுள் சிந்தனை, வழிபாடு இவைகளின் பலனாகத் தான், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை, அவர் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கல்வியில் சிறந்ததாகச் சொல்லப்படும் பள்ளி என்றால், அதில் எப்படியாவது தம் பிள்ளைகளுக்கு 'சீட்' வாங்கி விட வேண்டும் என்று தான் எல்லா பெற்றோரும் நினைப்பர். அதற்காக, பல்வேறு வகையில் சிபாரிசுகளையும் செய்வர். அப்படி, இந்தப் பள்ளியில் சீட் கேட்டு சிபாரிசு செய்தவர்கள் பலரையும், நிர்வாகத்தினர் ஆணவத்தோடு அவமரியாதை செய்திருக்கின்றனர். அதெல்லாம் கூட, இந்தப் பிரச்னை பூதாகரமாக்கப்படுவதன் பின்னணியாக இருக்கின்றன.


latest tamil news
அதனால், இதன் பின்பாவது பள்ளி நிர்வாகம் ஆணவத்தோடு நடப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை விசாரணை ஒரு தலைபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். அதில் துளி அளவு சந்தேகம் ஏற்பட்டாலும், தமிழகத்தில் விசாரணை நடக்கவிடாமல் செய்து விடுவேன்.அதற்கான சட்ட நுணுக்கங்கள் எனக்குத் தெரியும். அதேபோல, பள்ளியை மூடுவது, நிர்வாகத்தை மாற்றுவது என, அரசு தரப்பு முயற்சித்தாலே போதும்; அப்படியெல்லாம் செய்து முடிக்க, அவர்கள் கையில் ஆட்சி இருக்காது.இவ்வாறு, சுப்பிரமணியசுவாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (260)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
03-ஜூன்-202113:06:46 IST Report Abuse
வந்தியதேவன் இது ஒரு டம்மி பீசு...? வடிவேல் காமெடி மாதிரி.... “அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டே..?”... இவர் பழைய நினைப்புல இருக்காரு...? மிஸ்டர் சாமி... ரொம்ப வருஷமா தூக்கத்துல இருக்கீங்க...ன்னு நினைக்கிறேன்.... இப்ப சந்திரசேகர் பிரதமர் இல்ல... மோடிஜி...? அவர்கிட்ட போயிடாத... அவரு ஒரு மாதிரி... உன்னையே தூக்கி சாப்டுவாரு...? உஷாரா இரு...? இன்னும் எம்.பி., மந்திரி பதவி கிடைக்கணும்...னு சீன் போடாத... அத்தோட... “பொம்மை கேஸ்”...ன்னு ஒண்ணு இருக்கு... அதையெல்லாம் மறந்துட்ட போலிருக்கே...? நீ சொல்றது போன இருபதாம் நூற்றாண்டு, இது இருபத்தோறாம் நூற்றாண்டு...?
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
31-மே-202115:05:16 IST Report Abuse
Hari என்னமோ கோபாலு ,இன்று இந்த ஒரு பள்ளிமட்டுமே தன ஆசிரியரை வேலையைவிட்டு தூக்கிடுச்சு ,ஆனால் அரசு பள்ளிகள் இன்னும் ஒன்னுமே செய்யலை ,மிஷினரிகள் எப்போதும்போல தங்கள் கடமைகளை சரிவரை செய்கிறார்கள் ,அதனால சு சாமி சொன்னால் செய்வார் ,ஏற்கனவே டி பார்ட்டி கொடுத்து கருணாநிதியை தொக்கியவராச்சே.இப்போ இவரெல்லாம் ஒரு சொடுக்கு ..........அதனால பொத்திக்கிட்டு இப்போது அனைவரும் இருக்கிறார்கள் பாருங்கள்.
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
30-மே-202102:41:35 IST Report Abuse
NARAYANAN.V சாமி டெல்லியில் மேற்படி பள்ளியின் ஏஜெண்டாக வேலை பார்ப்பார்போலும்.அந்தப் பள்ளியின் முழு வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏற்றப்பட வேண்டும்.
Rate this:
dina - chennai,இந்தியா
01-ஜூன்-202123:43:37 IST Report Abuse
dinaகொஞ்சம் வாயை போடவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X