அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவிட் மரணங்களை குறைத்து காட்டுவதா ? கொதிக்கிறார் பழனிசாமி

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சேலம்: கோவிட் மரணங்களை தமிழக அரசு குறைத்து காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.சேலத்தில் கோவிட் தொற்று குறித்து ஆய்வு செய்த பிறகு நிருபர்களிடம் பழனிசாமி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைள் அதிகரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்த
எடப்பாடி பழனிசாமி, சேலம், எதிர்க்கட்சி தலைவர், கோவிட்19, கோவிட், கொரோனா, கொரோனா வைரஸ்,

சேலம்: கோவிட் மரணங்களை தமிழக அரசு குறைத்து காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் கோவிட் தொற்று குறித்து ஆய்வு செய்த பிறகு நிருபர்களிடம் பழனிசாமி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைள் அதிகரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். சேலம் இரும்பாலையில், 500 படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு கூறியது. ஆனால், இதுவரை ஏற்படுத்தவில்லை. அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

படுக்கைகள் இருப்பு குறித்து தமிழக அரசு தவறான புள்ளிவிவரங்களை தருகின்றன. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கோவிட் பரவல் அதிகரிக்கும் நிலையில், பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பரிசோதனையை அதிகரித்தால் தான் தொற்றை கண்டறிய வேண்டும்.


latest tamil newsகோவிட் மரணங்களை தமிழக அரசு குறைத்து காட்டுகிறது. மரணங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்காக மயானங்களில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் சொந்து ஊருக்கு சென்றதால், மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து உள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கிராமங்களில் தொற்று அதிகரிக்கிறது. போர்க்கால அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமிக்க வேண்டும். தமிழக அரசின் மெத்தனத்தால், அதிகளவில் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. களப்பணியாளர்களை நியமித்து, வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியின் போது, கோவிட் தடுப்பூசி இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
safhasivam -  ( Posted via: Dinamalar Android App )
28-மே-202122:54:48 IST Report Abuse
safhasivam சொல்றவர் ,,புத்தனுக்கு அக்கா மகன்....
Rate this:
Cancel
MAHBOOB HUSAIn - Khartoum,சூடான்
28-மே-202120:04:27 IST Report Abuse
MAHBOOB HUSAIn இப்படி அக்கரையாக நீலிக்கண்ணீர் , வஞ்சனையாக குறைசொல்லும் பழனிசாமி அவர்களே .. உண்மையிலேயே மக்கள் நலம் உள்ளவராக இருந்தால் மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் என் கலந்து கொள்ளவில்லை . ஓ பி எஸ் தேனீ மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களை மூக்கறுத்து தான் மக்கள் நலன் சார்ந்தவன் என காட்டிவிட்டார் .. இனியாவது நொண்டிச்சாக்கு அரசியல் செய்வதை விட்டு விட்டு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுங்கள். பண பலத்ததால் முதல்வராகி பணத்தை சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டிருந்த உங்களுக்கு மக்கள் நலன் சார்ந்த மாண்பு தானாக வருவது இயலாத ஒன்றுதான்.
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
28-மே-202119:11:43 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam ஆன்று சில நூறு மரணங்க்கள் மறைக்கபட்டதாக ஊடகங்க்கள் விவாதித்த்ன.... இன்று விவாதிக்குமா?பொய் என்றால் நிச்சயம் விவாதிப்பார்கள் பார்க்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X