சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திக்கு தெரியாத நிலையில் விசாரணை: சாட்சிகளாக மாறிய பள்ளி நிர்வாகிகள்

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (93)
Share
Advertisement
மாணவியரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாக, சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில், ஏற்கனவே அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேட்டு, பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோரை, அசோக் நகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து
ராஜகோபாலன், பாலியல் தொல்லை, கைது, விசாரணை

மாணவியரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாக, சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், ஏற்கனவே அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேட்டு, பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோரை, அசோக் நகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, 'இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ராஜகோபாலன் மீது, எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லாதபோது, நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்' என, பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர். அதற்கு, போலீஸ் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.


வேறு வழி


இரு நாட்களுக்கும் மேல், அவர்களிடம் இதே கேள்வி கேட்கப்பட்டு, ஒரே பதிலே பெறப்பட்ட நிலையில், வேறு வழியின்றி, அவர்கள் இருவரையும் சாட்சிகளாக்கி இருக்கின்றனர், போலீசார்.'எங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தாலாவது, புதிய சாட்சிகளை தயார் செய்து, ராஜகோபாலன் உள்ளிட்ட எங்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. 'எங்களை சாட்சிகளாக்கினால், கோர்ட்டில் ராஜகோபாலன் தரப்பு, எங்களை குறுக்கு விசாரணை செய்யும்போது, நாங்கள் பிறழ்சாட்சியாகத் தானே ஆவோம். அதெல்லாம், ராஜகோபாலனுக்குத் தானே சாதகமாக முடியும்' என, பள்ளி நிர்வாகம் தரப்பில் கேட்டுள்ளனர்.


latest tamil news



'அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்; இப்போது, நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்' என, போலீஸ் தரப்பில் சொல்லப்பட, நிர்வாக தரப்பில், அதற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதனால், திக்குத் தெரியாத திசையில், யாருடைய அழுத்தத்துக்கோ பணிந்து, வேண்டா வெறுப்பாக வழக்கை, போலீசார் கையாள்வது தெரிகிறது என, போலீஸ் தரப்பிலேயே சிலர் புலம்புகின்றனர்.


தண்டனை

வழக்கை நியாயமாக நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபித்து, அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தால் தானே, இதே தவறை அடுத்தவர் செய்யாமல் இருப்பார். அந்த உணர்வு இல்லாமலேயே, எல்லா வழக்குகளையும் போலவே, போலீசார் இந்த வழக்கையும் கையாள்வதாக தெரிகிறது.
-- நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
01-ஜூன்-202107:27:00 IST Report Abuse
மணி பால பவன் என்று வைத்துக்கொண்டு அக்கிரமம் செய்த அந்த பள்ளியே தேவையில்லை, அதை இடித்துவிட்டு அங்கு செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு சிவாலயம் கட்டவேண்டும்.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
31-மே-202121:24:08 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ராசகோபாலன் முக்கிய திமுக புள்ளிக்கு உறவினராமே.
Rate this:
A P - chennai,இந்தியா
02-ஜூன்-202111:32:50 IST Report Abuse
A Pதிமுகவின் அந்தப் புள்ளி எங்கு சென்று முக்கினார். அவருக்கு உறவினர் என்பதற்கு. தைரியமாகச் சொல்லுங்கள் அவர் யாரென்று. தயக்கம் ஏன் ஐயா ?...
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
30-மே-202111:40:32 IST Report Abuse
Nagarajan D வாங்குன காசுக்கு மேல கூவ கூடாதுன்னு உத்தரவு ஆயிருக்கு என்ன செய்ய... எல்லா விஷயத்திற்கும் போலீஸ் துறையை குற்றம் சொல்லக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X