கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ் ஜூன் 1 முதல் இலவசம் இல்லை

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்று கூகுள் போட்டோஸ். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம்.இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், 'கூகுள் 2021 ஜூன் 1 முதல் கூகுள் போட்டோஸ் தளத்தில் 'உயர் தரமான' புகைப்படங்களுக்கான வரம்பற்ற இலவச சேமிப்பிடம் என்ற சலுகை நிறுத்தப்படும்' என,

புதுடில்லி: இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்று கூகுள் போட்டோஸ். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், 'கூகுள் 2021 ஜூன் 1 முதல் கூகுள் போட்டோஸ் தளத்தில் 'உயர் தரமான' புகைப்படங்களுக்கான வரம்பற்ற இலவச சேமிப்பிடம் என்ற சலுகை நிறுத்தப்படும்' என, அறிவித்தது.latest tamil newsகூகிள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. வரும் ஜூன் 1ம் தேதிக்கு முன்னதாக, பயனர்கள் பதிவேற்றிய உயர் தரத்திலான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள், 15 ஜிபிக்குள் இருந்தால் அதை கூகுள் கணக்கு சேமிப்பிடத்தில் கணக்கிடப்படாது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு விலக்கு உண்டு. அதாவது ஜூன் 1க்குப் பிறகு, கூகுள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும். அதற்கு மேல் என்றால், அதற்கு கூகுள் ஒன் (Google One) என்பதற்கான சந்தாவை செலுத்த வேண்டும்.


latest tamil newsகூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா 100 ஜிபி திட்டத்துடன் துவங்குகிறது. இதற்கு மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடனும் ஸ்டோரேஜை பகிரலாம். 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதற்கு மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும். 2டிபிக்கு மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 செலுத்த வேண்டும். 10டிபிக்கு, மாதத்திற்கு ரூ.3,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇருப்பினும், உலகளவிலான பிக்சல் (Pixel) பயனர்களுக்கு இது பொருந்தாது என, கூகிள் கூறியுள்ளது. நீங்கள் ஒரு பிக்சல் சாதனம் வைத்திருந்தால், கூகுள் போட்டோசில் வரம்பற்ற வகையில் இலவச உயர்தர புகைப்படங்களை சேமிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.கூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்வை உள்ளன. இவற்றில் சேமிப்பு திட்டத்திற்கான கட்டணம் கூகுள் போட்டோஸ் அறிவித்ததை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
28-மே-202119:20:31 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam தேவை யில்லை இப்ப எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்று டெராபைட் நன்காயிரம் ருபாய் அதாவது ஆயிரம் ஜிகா பைட் அதனால் மொபைலிலில் இருந்து மாற்றிவைத்துக்கொள்ள வேண்டும் 100 giga bite 1500 இத்ற்கு ஆறு மடங்கு நன்காயிரம் தான்
Rate this:
Cancel
அடங்குல - Madurai,இந்தியா
28-மே-202116:41:32 IST Report Abuse
அடங்குல கூகிள் 15gb லிமிடேச கடைசி தேதியினை பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது. 15gb buffer மெமோரிக்கு மிகவும் தாராளம்.
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) மக்களை ஒரு சேவையை பயன்படுத்தவைத்து, அது இல்லாமல் அவர்களால் வாழமுடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி பின்னர் தங்கள் வியாபார நோக்கத்தினை மக்களின் மீது மறைமுகமாக மற்றும் நேர்முகமாக திணிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் ?
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
29-மே-202101:30:31 IST Report Abuse
naadodiகொடுமையான விஷயமே இல்லை. இதுவும் இலவசத்துக்கு விலை போவது போல் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X