விவசாயிகள் போராட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றும் மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு| Dinamalar

விவசாயிகள் போராட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றும் மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (48) | |
புதுடில்லி: 'விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பெருந்தொற்று நோய்க்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது

புதுடில்லி: 'விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news




மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பெருந்தொற்று நோய்க்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது கவலையளிக்கிறது. விவசாயிகள் போராட்டம் ஆறு மாதங்களைக் கடந்துள்ளது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.





latest tamil news



மத்திய அரசு புதிய திருப்பமாக, 'கோவிட் காலத்துக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தப்படுவது சரியானது அல்ல' என, தெரிவித்துள்ளது. ஆனால் சட்டத்தை திரும்பப் பெறாமல் உள்ளது. மக்களின் சேவகனாக மத்திய அரசு இருந்தால், பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டும்; வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X