பொது செய்தி

இந்தியா

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை; நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
நாக்பூர்: உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.கோவிட்-19 தொற்று ஏற்பட்டதை கண்டறியும் பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான, புதுமையான கோவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல்
SalineGargle, RTPCR, Method, உமிழ்நீர், உப்புத்தண்ணீர், ஆர்டி பிசிஆர், சோதனை,

நாக்பூர்: உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று ஏற்பட்டதை கண்டறியும் பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான, புதுமையான கோவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் எளிதான மற்றும் விரைவான முறையை கண்டறிந்துள்ளனர்.


latest tamil news


இந்த முறையில் 3 மணி நேரத்தில் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.

இது குறித்து சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி, டாக்டர் கிருஷ்ணா கையர்னர் கூறியதாவது: சளி பரிசோதனை முறைக்கு நேரம் ஆகிறது. மேலும், மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டியுள்ளதால், இது நோயாளிகளுக்கு சற்று அசவுகரியமாகவும் உள்ளது. மேலும், இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது. வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது மற்றும் முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
01-ஜூன்-202117:26:01 IST Report Abuse
INDIAN Kumar தினமும் நல்ல எண்ணையில் வாய் கொப்பழிங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் .
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202117:01:01 IST Report Abuse
Tamilnesan நல்ல என்னை சூடு பண்ணியதா, இல்லை வெறும் நல்லெண்ணெயா?...
Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
03-ஜூன்-202120:51:25 IST Report Abuse
Muruganவெறும் நல்லெண்ணையில் காலை எழுந்தவுடன் ஐந்து நிமிடம் நன்றாக வாய் கொப்பளித்தால் வாய்,வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் .நீங்களே அறிவீர்கள். இது எனது அனுபவம். மேலும் குளிர் காலத்தில் இங்கு செய்து கொண்டு இருக்கிறோம் ....
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
01-ஜூன்-202117:23:43 IST Report Abuse
INDIAN Kumar எங்கள் ஊர் வேப்பிலை எல்லா வைரஸையும் அடித்து விரட்டும் முயட்சி செய்து பாருங்கள் உண்மை தெரியும்.
Rate this:
Cancel
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
29-மே-202110:51:07 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai நமது விஞ்சானிகள் நம் தேசத்தின் வரம் ஒன்றிய அரசு நடத்தும் அரசியலார் நமது சாபம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X