ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

Updated : மே 29, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (55) | |
Advertisement
சென்னை:தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி காலை வரை நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கடந்த ஒரு மாதமாக, கொரோனா நோய் பரவல் அதிகரித்ததால், மருத்துவ வல்லுனர்கள், மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், மே 24 முதல் ஒரு வாரத்திற்கு, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து தடை கடைகள் அனைத்தும்
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை:தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி காலை வரை நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கடந்த ஒரு மாதமாக, கொரோனா நோய் பரவல் அதிகரித்ததால், மருத்துவ வல்லுனர்கள், மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், மே 24 முதல் ஒரு வாரத்திற்கு, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.


போக்குவரத்து தடை


கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக, கொரோனா நோய் பரவல் குறையத் துவங்கி உள்ளது. சென்னை உட்பட சில மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்தாலும், கோவை, திருப்பூர் உட்பட சில மாவட்டங்களில் அதிகரித்தபடி உள்ளது.ஏற்கனவே அறிவித்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, நாளை மறுதினம் காலை, 6:00 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிவிப்பு:மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்க, இந்த முழு ஊரடங்கு, ஜூன் 7 காலை, 6:00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.எனினும், பொது மக்கள் அத்தியாவசிய, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும், நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடக்கும்.


latest tamil news
அனுமதிமேலும், மளிகை பொருட்களை, அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், வாகனங்கள் அல்லது தள்ளுவண்டியில், உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, விற்பனை செய்யலாம்.'ஆன்லைன்' மற்றும் தொலைபேசி வழியாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும், காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், ரேஷன் கடைகளில் ஜூன் முதல் வழங்க, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பொது மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி, வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.முழு ஒத்துழைப்புகொரோனா மேலாண்மைக்கான, தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில், முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினியால் சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், மருத்துவமனைகளை நாடி, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.மக்கள் அனைவரும், அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


மொத்த விற்பனை கடை திறக்கப்படுமா?முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், மளிகை வியாபாரிகள், வாகனங்கள் அல்லது தள்ளுவண்டியில் மளிகை பொருட்களை விற்கலாம்.'ஆன்லைன்' மற்றும் தொலைபேசி வழியாக கேட்கும் வாடிக்கையாளர் வீடுகளுக்கு வழங்கலாம் என, முதல்வர் அறிவித்து உள்ளார். இது, வரவேற்கத்தக்கது. அதேநேரம், பெரும்பாலான சிறிய மளிகை வியாபாரிகள், மாதத்தின் முதல் வாரத்தில் தான், மொத்தமாக மளிகை பொருட்களை வாங்குவர். ஒரு வாரமாக, கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. எனவே, பொருட்கள் வாங்காமல் உள்ளனர். அவர்கள் பொருட்கள் வாங்க, மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். அங்கிருந்து, கடைக்கு பொருட்களை வாங்கி வரவும் அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (55)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
29-மே-202113:46:12 IST Report Abuse
சேகர்  சென்னை காய்கறி வண்டி வரலை காய்கறி வண்டி வருதா ன்னு வீட்டு வாசல்ல கதவு தொறந்து போய் பார்க்க போணால் ரோட்டுல்ல நாய் தான் வருது
Rate this:
Cancel
29-மே-202111:02:15 IST Report Abuse
இசக்கி   சென்னை  வீட்டு வாடகை கொடூக்க பணம் இல்லை வீட்டு சொந்த காரன் குழாயில தண்ணீர் விட மறுத்து வால்வை மூடி வைக்கீறான் அவன் கூட சண்டை போட வேண்டியிருக்கு ஆட்டோ வூக்கு லோன் (e m e) அடைக்க முடியலை e b பில் கட்ட பணம் இல்லை குடும்ப செலவுக்கு பணம் இல்லை
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-மே-202111:00:26 IST Report Abuse
அசோக்ராஜ் ஊரடங்குனால கொரோனா சங்கிலி அந்து போயிடும்னா போன வருசம் அந்து போகலியே ஏன்? படிப்பினை வேண்டாமா? ஊரடங்கு என்பது முச்சூடும் இருப்பவன் இல்லாதவன் மீது தொடுக்கும் தாக்குதல். பொருளாதாரம் நசித்து இல்லாதவன் சாவணும். இடம் பெயரணும். மிஞ்சுன சொத்தையும் சல்லிசா வித்துட்டு ஓடணும். ஆண்டை கிட்டே கையேந்தணும். அவன் வீசுற பிஸ்கோத்தைப் பொறுக்கிக்கணும். சுயமரியாதை சுத்தமா இல்லாம போவணும். ஊரடங்கு வேணும்னு இன்னைக்கு கேக்கறவன் நாளைக்கு பஞ்சத்தில் மாட்டும்போது ரகசியமா அழுவான். திராவிஷம் என்பது சொல்லாததையும் செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X