திருமண ஆசை காட்டி 5 ஆண்டு குடும்பம் மாஜி அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண ஆசை காட்டி 5 ஆண்டு 'குடும்பம்' 'மாஜி' அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (13)
Share
சென்னை:திருமண ஆசைகாட்டி, உல்லாசம் அனுபவித்து, கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, போலீசில் நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், பழனிசாமி., அமைச்சரவையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். பின், இவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.இவர்
 திருமண ஆசை காட்டி 5 ஆண்டு 'குடும்பம்' 'மாஜி' அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்

சென்னை:திருமண ஆசைகாட்டி, உல்லாசம் அனுபவித்து, கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, போலீசில் நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், பழனிசாமி., அமைச்சரவையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். பின், இவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.இவர் மீது, சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் நடிகை சாந்தினி, 36 என்பவர், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதியிடம், அளித்துள்ள புகார்:

நான் மலேஷிய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத பெண். நான் மலேஷியா சுற்றுலா வளர்ச்சி கழக துாதுவராக பணிபுரிந்த போது, பணி நிமித்தமாக அடிக்கடி, இந்தியா வந்து செல்வது வழக்கம்.அப்போது, 2017ல், அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக, தன்னை சந்திக்க விரும்புவதாக, பரணி என்பவர் என்னிடம் தெரிவித்தார்.

அதன்படி, அதே ஆண்டு மே, 3ல், சென்னையில், அமைச்சருக்கான வீட்டில், மணிகண்டனை சந்தித்தேன். சுற்றுலா தொடர்பாக பேசிய அவர், மலேஷியாவில் தொழில் முதலீடு செய்ய உள்ளதாகவும், அதற்கு, என் உதவி தேவைப்படுவதாகவும் கூறி, மொபைல் போன் எண்ணை வாங்கினார்.அன்று மாலையே, தொழில் முதலீடு குறித்து பேசுவது போல, என்னை தொடர்பு கொண்ட மணிகண்டன், என் அழகு குறித்து வர்ணித்தார். 'என் குடும்ப வாழ்வில் சந்தோஷம் இல்லை. உன்னைப் போன்ற அழகான பெண், என் இல்லற வாழ்வில் இருந்தால், மிகவும் சந்தோஷமாக இருக்கும்' என்றார்.

நாளடைவில், என்னை காதலிப்பதாகவும் கூறினார்.நான் அவருடைய காதலை ஏற்க மறுத்தேன். என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். மனைவிக்கும் தனக்கும் சமூக உறவு இல்லை என்றும், அதனால், விவகாரத்து செய்ய இருப்பதாகவும் கூறினார். அவர் கூறியதை நம்பி, காதலில் விழுந்தேன்.பெசன்ட் நகரில், வாடகை வீட்டில், ஐந்து ஆண்டுகள் என்னுடன் குடும்பம் நடத்தினார். கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தோம்.

நான் எங்கு வெளியில் சென்றாலும், அவரின் காரில் தான் செல்வேன்.கணவன், மனைவியாக ராமேஸ்வரம், புதுச்சேரி மற்றும் டில்லியில் உள்ள, தமிழ்நாடு இல்லம் என, பல இடங்களுக்கு சென்றுள்ளோம். 2019ல், சட்டசபையில் அவரது உரையை கேட்க, மணிகண்டனின் மனைவி என, அனுமதிக்கப்பட்டேன்.என்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். மனைவியை சட்ட ரீதியாக விவகாரத்து செய்த பின், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தது, வீட்டு வேலைக்கார பெண் சின்னா, உதவியாளர் கவுரிநாதன், பாண்டி, செல்வி, கோவிந்தம்மா மற்றும் போலீஸ்காரர் மணி ஆகியோருக்கு தெரியும்.என் கணவராக இருந்து, உல்லாசம் அனுபவித்தார். இதனால், மூன்று முறை கருவுற்றேன். நாம் முறைப்படி திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி, அவரது நண்பர் அருண் நடத்தி வரும், கோபாலபுரத்தில் உள்ள, 'லிப்மெட்' மருத்துவமனையில், கட்டாயப்படுத்தி சட்ட விரோதமாக எனக்கு கருக்கலைப்பு செய்தார்.

'காப்பர் - டி' என்ற கருத்தடுப்பு சாதனத்தை பொருத்தி, என்னுடன் பல முறை உறவு கொண்டார். மாதவிடாய் நேரத்திலும் மிருகத்தனமாக, தன் இச்சையை தீர்த்துக் கொண்டார். இதனால், என் உடல் நிலை பாதிக்கப்பட்டது.வருங்கால கணவர் எனக்கருதி, அவரது கொடுமைகளை சகித்துக் கொண்டேன்.

ஒரு முறை திருமணம் செய்ய வற்புறுத்திய போது, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார்; என்னை அடித்து துன்புறுத்தினார். தற்போது, மணிகண்டன், சொந்த ஊருக்கு சென்றதும், என்னை மிரட்டுகிறார். என்னுடன் குடும்பம் நடத்தியபோது எடுக்கப்பட்ட, அந்தரங்க படங்களை, இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார். அதில், ஒரு படத்தை, 'டெலிகிராம்' என்ற, சமூக வலைதளத்தில் எனக்கு அனுப்பினார்.

கூலிப்படையை ஏவி, எனக்கும் மலேஷியாவில் உள்ள, என் பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதற்கு பரணி என்பவர், உறுதுணையாக உள்ளார். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகார் மனுவில் கூறியுள்ளார். சசிகுமார் நடித்த, 'நாடோடிகள்' உள்ளிட்ட படங்களில், சாந்தினி நடித்துள்ளார்.


பணம் பறிக்கும் கும்பலைசட்டப்படி சந்திப்பேன்இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:நடிகை புகார் பொய்யானது. இவர்கள், மிரட்டி பணம் பறிக்கும் விபசார கும்பல். அமைச்சராக இருந்த போது, தினமும் 1,000 பேரை சந்தித்து இருப்பேன். அவர்களை நினைவில் வைக்க முடியாது. என்னோடு 'போட்டோ' எடுத்திருக்கலாம். அந்த போட்டோ கூட 'மார்பிங்' செய்யப்பட்டதாக இருக்கலாம்.

மூன்று நாட்களுக்கு முன் ஒரு கும்பல், வக்கீல் வைத்து பேசினர். யார், என்ன என்று தெரிந்து கொள்வதற்காக நானும் வக்கீலை அழைத்து சென்று பேசினேன். அவர்கள் இந்த போட்டோவை காட்டி பணம் கேட்டனர். அதற்கு நான், எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றேன்.எதற்காக எங்களை வரச் சொன்னீர்கள் என்று கேட்ட போது, 3 கோடி ரூபாய் கேட்டனர். பின், 2 கோடி, 1 கோடி என, பேரம்பேசி, 10 லட்சம் ரூபாய் கேட்டனர்.

ராமநாதபுரம் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க உள்ளேன். அரசியல் ரீதியாக உள்நோக்கம் இருந்தாலும், பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் உள்ளது. புகாரை சட்டப்படி சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X