சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு பாலியல் தொல்லை புகார் மகரிஷி வித்யாமந்திர் ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

Added : மே 28, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:பாலியல் புகார் தொடர்பாக, மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இந்த விவகாரம், பள்ளி நிர்வாகத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 மாணவியருக்கு பாலியல் தொல்லை புகார் மகரிஷி வித்யாமந்திர் ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

சென்னை:பாலியல் புகார் தொடர்பாக, மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இந்த விவகாரம், பள்ளி நிர்வாகத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது, சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் என்பவர் மீது தான், மாணவியர் புகார் தெரிவித்துள்ளனர். அந்த ஆசிரியர் பள்ளி நிர்வாகத்தால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, மகரிஷி வித்யாமந்திர் பள்ளி நிர்வாகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு: எங்கள் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் குறித்து, முன்னாள் மாணவர்கள் சிலர், சமூக வலைதளங்கள் வாயிலாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர். அதன் உண்மை தன்மை குறித்து, பள்ளியின் துறை ரீதியான கமிட்டி விசாரிக்க பரிந்துரைத்துள்ளோம். இந்த விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்.மாணவர்களின் உணர்வுகளை மதித்து, குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் குறித்த விசாரணை அறிக்கை வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விசாரணை நடந்து வரும் நிலையில், ஆசிரியர் ஆனந்த், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களை எங்களின் சொந்த பிள்ளைகளாக கருதுகிறோம். அவர்களின் நலன்களுக்கு, எங்கள் நிறுவனம் முழுமையான முக்கியத்துவம் அளிக்கும். மாணவர்களுக்கு எதிராக, எந்த ஒரு தவறான அணுகுமுறை, தவறான நடத்தை மற்றும் கொடுமைகளை எங்கள் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது.

எங்கள் பள்ளியில் படிக்கும் போதும், படித்து முடித்த பிறகும், எங்கள் மாணவர்கள் எங்களின் மதிப்புக்கு உரியவர்களே.எங்களிடம் அன்பு கொண்டுள்ள எங்கள் மாணவர்களுக்கு, கல்வி வழங்குவதற்காகவே நாங்கள் உள்ளோம்.பள்ளியின் பெருமைக்கும், புகழுக்கும் எந்த வித பங்கமும் வந்து விடக்கூடாது என, நினைக்கும் மாணவர்களின் நோக்கத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.

எனவே, மாணவர்களுக்கு எதிரான எந்த ஒரு தவறான அணுகுமுறையும், எப்போதும் நடப்பதை சகித்து கொள்ள மாட்டோம் என, உறுதி அளிக்கிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
01-ஜூன்-202110:20:42 IST Report Abuse
gayathri தனிமனித ஒழுக்கம் இருப்போர் அறத்தில் இருந்து தவறுவதில்லை . தனிமனிதஒழுக்கமற்றோர் எப்படி வேண்டுமானாலும் பேசுவார். நடப்பர். அதுதான் உண்மை . இதில் ஜாதிக்கோ /மதத்திற்கோ / முட்டாளுககு / அறிவாளிக்கோ என்று பேதம் பார்க்க முடியாது
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
01-ஜூன்-202106:43:59 IST Report Abuse
N Annamalai இது தான் சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .ஜாதி சொல்லி தப்பிக்க பார்ப்பது தவறு .
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
31-மே-202116:40:50 IST Report Abuse
சோணகிரி மாட்டிக்கொண்ட ஆசிரியன் திராவிஷ கறுப்பர் கூட்டத்தைச்சேர்ந்தவன் போலத்தான் தெரியுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X