இந்திய வரலாற்றில் பிரதமரையே காக்க வைத்த முதல்வர் மம்தா| Dinamalar

இந்திய வரலாற்றில் பிரதமரையே காக்க வைத்த முதல்வர் மம்தா

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (89) | |
கோல்கட்டா: யாஸ் புயல் சேதங்களை பார்வையிட மேற்கு வங்கம் வந்த பிரதமரை முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காக்க வைத்து அவமதித்ததாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரையே மாநில முதல்வர் காக்க வைத்திருந்தது இதுவே முதல் முறை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவில் கடந்த

கோல்கட்டா: யாஸ் புயல் சேதங்களை பார்வையிட மேற்கு வங்கம் வந்த பிரதமரை முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காக்க வைத்து அவமதித்ததாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரையே மாநில முதல்வர் காக்க வைத்திருந்தது இதுவே முதல் முறை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.latest tamil newsவங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவில் கடந்த மே 26 அன்று கரையை கடந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் பாதிக்கப் பட்டன. பிரதமர் மோடி இரு மாநிலங்களிலும் இன்று புயல் சேதங்களை பார்வையிட்டார். பின்னர் நிவாரண பணிகளுக்காக ஒடிஷாவுக்கு ரூ.500 கோடியும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டுக்கு ரூ.500 கோடியும் அறிவித்தார்.
புயல் சேதங்களை காண பிரதமர் மோடியுடன் முதல்வர் மம்தா பானர்ஜி செல்லவில்லை. அதற்கு பதிலாக விமான நிலையத்தில் ஒரு 15 நிமிட விரைவு கூட்டத்தில் பிரதமரை சந்தித்தார். கடுமையான தேர்தல் பிரசாரங்களுக்கு பின் அவர்களின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும். அந்த கூட்டத்திலும் மம்தா எதுவும் பேசவில்லை.
“நீங்கள் என்னை சந்திக்க விரும்பினீர்கள், அதனால் தான் நான் இன்று வந்தேன். நானும் எனது தலைமை செயலாளரும் இந்த அறிக்கையை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறோம். இப்போது திகாவில் எங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கிறது. எனவே நாங்கள் வெளியேற உங்கள் அனுமதியை எதிர்பார்க்கிறோம்" என கூறி சென்றுள்ளார்.
பிரதமர் மற்றும் கவர்னரை, மம்தா அரை மணி நேரம் காத்திருக்க வைத்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. கவர்னர் ஜக்தீப் தன்கர் மம்தா பிரதமரை புறக்கணித்ததாக கூறியுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் பிரதமர் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். அவரது இடப்பக்கம் கவர்னர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் உள்ளனர். அவரது வலப்பக்க இருக்கைகள் காலியாக உள்ளன.


latest tamil news

ஆணவ நடத்தை!


இது குறித்து அங்கிருந்த அதிகாரிகள் கூறியதாவது: கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் வந்தபோது, மேற்கு வங்க அரசாங்கத்திலிருந்து யாரும் வரவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் இருவரும் அதே வளாகத்தில் தான் இருந்தனர், ஆனாலும் அவர்கள் பிரதமரை வரவேற்கவில்லை.
திடீரென்று வந்த மம்தா பானர்ஜி, புயல் தாக்கம் குறித்த ஒரு சில ஆவணங்களை பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். இந்திய குடியரசு வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் ஒரு மாநில முதல்வர், பிரதமர் போன்ற உயர் அரசியலமைப்பு பதவியில் இருப்பவரிடம் இப்படி அவமரியாதையாக, ஆணவத்துடன் நடந்து கொண்டதில்லை. என்கின்றனர்.


தலைமை செயலாளர் மாற்றம்இதற்கிடையே மேற்குவங்க மாநில தலைமை செயலாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X