இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும்தடுப்பூசி

Updated : மே 30, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
''இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல்
இந்தாண்டு இறுதி,..தடுப்பூசி  மத்திய அமைச்சர் ஜாவடேகர்

''இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் மிகவும் கவலைப்படுகிறார். மத்திய அரசு நாடகமாடுவதாக அவர் கூறியுள்ளார்.குளறுபடிஅவர் உண்மையில், அவரது கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் குறித்து தான் கவலைப்பட வேண்டும்.காரணம், தடுப்பூசி போடும் திட்டத்தில் அம்மாநிலங்கள் நிறைய குளறுபடிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள், சரிவர போடப்படவில்லை.குறிப்பாக, 18 - 44 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம், கடந்த 1ம் தேதி முதல் துவங்கப்பட்டும் கூட, அத்திட்டத்தை அந்த மாநிலங்கள் சரியாக கையாளவில்லை.நாடு முழுதும் தற்போது மட்டுமே 1.84 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள் கையாளப்பட்டு, அவற்றை மக்களுக்கு போடும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.


விமர்சனம்உள்நாட்டில் தயாராகி வரும் 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகள் மட்டுமல்லாது, விரைவில் வெளிநாட்டிலிருந்தும் பல்வேறு தடுப்பூசிகள் வரவுள்ளன. எனவே அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே நிறைவுக்கு வந்துவிடும்.சுகாதார அமைச்சகம் கூறுவதன் அடிப்படையில், வரும் டிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாராகிவிடும். அப்படியானால் நாட்டு மக்களில், 108 கோடி பேர் வரையில், தங்களுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்வர் என்ற நிலை உருவாகும்.இது புரியாமல் ராகுல் பேசுகிறார். கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடி நடத்திய நாடகம் என்றெல்லாம் தரம் தாழ்ந்து ராகுல் விமர்சனம் செய்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


கள்ளச்சந்தையில் மருந்து நடவடிக்கை பாயுமா?பா.ஜ., மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா சிகிச்சைக்கான 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்துகள் பதுக்கப்படுகின்றன. கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அது மட்டுமின்றி, டில்லியில் மருத்துவமனை படுக்கைகள் கூட பதுக்கப்படுகின்றன.

இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏழைகள், நடுத்தர வகுப்பினர் சாலையிலும், வாகனங்களிலும், மருத்துவமனை வாசலிலும் படுத்துக் கிடக்கும் நிலை உள்ளது. உயிர் காக்கும், 'டோசிலிசுமப்' போன்ற ஊசி மருந்துகள், போலியாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளிகளின் பினாமி சொத்துக்கள், முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். வெளிநாடுகளில் உள்ளதைப் போல், கடுமையான சட்டங்களை இயற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மே-202119:18:12 IST Report Abuse
ஆப்பு //தடுப்பூசி போடுவது பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் தான் கவலைப்பட வேண்டும்.// இவிங்க ஆளும் மாநிலங்களில் ஆத்தில் பொணம் போனாலும் கவலைப் பட மாட்டார்கள்.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
29-மே-202109:17:15 IST Report Abuse
rajan நாடு முழுதும் தற்போது மட்டுமே 1.84 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள் கையாளப்பட்டு, அவற்றை மக்களுக்கு போடும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. - 135 கோடி பேருக்கு 1.84 லட்சம் 'டோஸ் - எவ்வளவு அதிகம் விரைவில் வெளிநாட்டிலிருந்தும் பல்வேறு தடுப்பூசிகள் வரவுள்ளன. - எப்போது என்று அமைச்சர் சொல்லுவாரா வரும் டிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாராகிவிடும் - எப்போது அவை அனைத்தும் விநியோகிக்கப்படும் என்று சொல்லவில்லையே இது புரியாமல் ராகுல் பேசுகிறார் இது புரியாமல் பேசுவது மத்திய அமைச்சரே - மத்திய சுகாதார துறை அமைச்சர் எங்கே போனார்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
29-மே-202106:53:24 IST Report Abuse
blocked user புரளியைக்கிளப்பி பொதுமக்களுக்கு பயத்தை உண்டுபண்ண எதிரிக்கட்சிகள் தயாராக காத்திருக்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X