தலைமை செயலரை விடுவிக்க உத்தரவு

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி :மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் தலைமைச் செயலராக இருப்பவர் ஆலபன் பந்தோபத்யாய், 60. இவர், நாளை மறுதினம் பணி ஓய்வு பெற இருந்தார். இவருக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக, முதல்வர் மம்தா சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், 'தலைமைச் செயலரை உடனடியாக பணியில் இருந்து
Alapan Bandyopadhyay new West மேற்குவங்க  தலைமை செயலாளர் திடீர் பணியிட மாற்றம்Bengal chief secretary

புதுடில்லி :மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் தலைமைச் செயலராக இருப்பவர் ஆலபன் பந்தோபத்யாய், 60. இவர், நாளை மறுதினம் பணி ஓய்வு பெற இருந்தார்.

இவருக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக, முதல்வர் மம்தா சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், 'தலைமைச் செயலரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து, நாளை மறுதினம் காலை, 10:00 மணிக்குள், டில்லியில் உள்ள உள்துறை அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்த வேண்டும்' என, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக,


latest tamil news


பிரதமர் மோடி வந்திருந்தார்.
அப்போது, பிரதமரை சந்திக்க வந்திருந்த முதல்வர் மம்தாவுடன், தலைமைச் செயலரும் உடன் இருந்தார். ஆனால், பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை, முதல்வர் மம்தா புறக்கணித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
29-மே-202113:44:30 IST Report Abuse
Ellamman பிரதமர் பிம்பம் இங்கு கிழிந்து தொங்குது.... மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் பதில் சொல்லியாகவேண்டும்... இவரை பணிமாறுதல் செய்ததற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியருக்கும் சண்டை வந்தால் கிளாஸ் லீடரை பள்ளி மாற்றிவிடுவார்களா??
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
29-மே-202113:09:26 IST Report Abuse
Ellamman எப்படி பார்த்தாலும் மம்தாவிற்கு இந்த சுற்றில் புள்ளி....
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
29-மே-202113:08:54 IST Report Abuse
Dhurvesh மாநில தலைமைச் செயலாளரை திரும்பபெறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அனுமதியில்லாமல் மாநிலத்துக்குள் நுழைந்த 50 சிபிஐ அதிகாரிகளை Round -Up செய்து காவல் நிலையத்தில் சிறைவைத்த மம்தாவிடம் மோடி நிறைய கற்க வேண்டும். வீர மங்கை மம்தாவிடம் மோடியின் தந்திரங்கள் பலிக்காது.
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
29-மே-202122:18:35 IST Report Abuse
Suppanதிராவிடன் என்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டாலே சிந்திக்க மறுப்பவர்கள் போலிருக்கிறது. அந்தப் பணியில் இருப்பவர் குடிமைப் பணி அதிகாரி (IAS). அவர்களெல்லோரும் மத்திய அரசுக்குக் கீழ்ப்பட்டவர்கள். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுவிட்டுக் கருத்து எழுதுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X