தலைமை செயலரை விடுவிக்க உத்தரவு| Dinamalar

தலைமை செயலரை விடுவிக்க உத்தரவு

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (26)
Share
புதுடில்லி :மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் தலைமைச் செயலராக இருப்பவர் ஆலபன் பந்தோபத்யாய், 60. இவர், நாளை மறுதினம் பணி ஓய்வு பெற இருந்தார். இவருக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக, முதல்வர் மம்தா சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், 'தலைமைச் செயலரை உடனடியாக பணியில் இருந்து
Alapan Bandyopadhyay new West மேற்குவங்க  தலைமை செயலாளர் திடீர் பணியிட மாற்றம்Bengal chief secretary

புதுடில்லி :மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் தலைமைச் செயலராக இருப்பவர் ஆலபன் பந்தோபத்யாய், 60. இவர், நாளை மறுதினம் பணி ஓய்வு பெற இருந்தார்.

இவருக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக, முதல்வர் மம்தா சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், 'தலைமைச் செயலரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து, நாளை மறுதினம் காலை, 10:00 மணிக்குள், டில்லியில் உள்ள உள்துறை அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்த வேண்டும்' என, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக,


latest tamil news


பிரதமர் மோடி வந்திருந்தார்.
அப்போது, பிரதமரை சந்திக்க வந்திருந்த முதல்வர் மம்தாவுடன், தலைமைச் செயலரும் உடன் இருந்தார். ஆனால், பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை, முதல்வர் மம்தா புறக்கணித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X