சென்னை :முதல்வர் ஸ்டாலின், நேற்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்திற்கு சென்று, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை வழியாக பயன் பெற்ற மனுதாரர்களிடம், தொலைபேசி வழியாக கலந்துரையாடினார்.
முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். அவற்றுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற, புதிய துறை உருவாக்கப்பட்டது.இத்துறையில், நான்கு லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களும், மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சார்பில் பரா
மரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு மனுவும் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன், தனித்தன்மையுடன் கூடிய, அடையாள எண் வழங்கப்பட்டு, அந்த எண்ணுடன் கூடிய, எஸ்.எம்.எஸ்., தகவல் மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் மற்றும் அதன் தன்மைக்கேற்றவாறு, தகுதியான மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண, மாவட்ட அலுவலர்கள், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள, தமிழ்நாடு மின் ஆளுமை கமிஷனர் அலுவலகத்திற்கு, நேற்று ஸ்டாலின் நேரில் சென்றார். அங்கு, பெறப்பட்ட மனுக்கள், எவ்வாறு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன; அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இத்துறையின் கீழ் பயனடைந்த, தேனி, ராணிப்பேட்டை, வேலுார், சென்னை பயனாளிகளுடன், தொலைபேசி வழியாக உரையாடினார். அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், கிடைக்கப் பெற்ற பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க, ஒவ்வொரு பயனாளிகளிடமும், முக
கவசம் கட்டாயம் அணியும்படி அறிவுறுத்தினார்.அப்போது, தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின் ஆளுமை கமிஷனர் சந்தோஷ் கே மிஸ்ரா, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.