சோக்சியை வெளியேற்ற டொமினிக்கா நீதிமன்றம் தடை

Updated : மே 29, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஆன்டிகுவாவில் இருந்து தப்பிச் சென்று, டொமினிக்காவில் பிடிபட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்சியை, மறு உத்தரவு வரும் வரை, அந்நாட்டில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, 2018ல், வட அமெரிக்க நாடான, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு தப்பினார்.ஏற்கனவே
மெஹூல் சோக்சி, ஆன்டிகுவா, டொமினிக்கா,

ஆன்டிகுவாவில் இருந்து தப்பிச் சென்று, டொமினிக்காவில் பிடிபட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்சியை, மறு உத்தரவு வரும் வரை, அந்நாட்டில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, 2018ல், வட அமெரிக்க நாடான, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு தப்பினார்.ஏற்கனவே அந்நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதால் அங்கு வசித்து வந்தார். அவரை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த, 23ம் தேதி, இரவு உணவு சாப்பிட வெளியே சென்ற சோக்சி, மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர், வட அமெரிக்க நாடான கியூபாவுக்கு தப்பி இருக்க கூடும் எனக் கூறப்பட்டது. அவரை காணாமல் போன நபராக அறிவித்து, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார், மஞ்சள் நோட்டீஸ் வினியோகித்தனர்.

இந்நிலையில், ஆன்டிகுவா அருகே உள்ள மற்றொரு தீவு நாடான டொமினிக்காவில் சோக்சி கைது செய்யப்பட்டார்.அவரை, ஆன்டிகுவா அனுப்பாமல், நேரடியாக இந்திய அரசிடம் ஒப்படைக்கும்படி ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுன் வலியுறுத்தினார். கப்பல் வாயிலாக கியூபா செல்ல முயற்சித்த போது, டொமினிக்காவில் சோக்சி பிடிபட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news


டொமினிக்காவில் உள்ள சோக்சியின் வழக்கறிஞர், அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில்,ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில், சோக்சியை அணுக முடியாத நிலை இருப்பதாகவும், அவருக்கான அரசியல் சாசன உரிமை மற்றும் சட்ட ரீதியிலான உதவிகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மறு உத்தரவு வரும் வரை சோக்சியை டொமினிக்காவில் இருந்து வெளியேற்ற முடியாது' என உத்தரவிட்டனர்.

சோக்சியின் வழக்கறிஞர் வெய்ன் மார்ஷ் கூறியதாவது:பல்வேறு கட்ட கடும் முயற்சிகளுக்கு பின், சோக்சியை சிறையில் இரண்டு நிமிடங்கள் சந்தித்து பேச அனுமதி கிடைத்தது.கடந்த, 23ம் தேதியன்று, ஜாலி ஹார்பர் பகுதியில் இருந்து, சோக்சியை சிலர் கப்பலில் டொமினிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் பார்ப்பதற்கு இந்தியா மற்றும் ஆன்டிகுவாவை சேர்ந்த போலீசாரை போல் இருந்ததாக சோக்சி தெரிவித்தார்.அவரது கண்களில் வீக்கம் இருந்தன. அவரது உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான காயங்கள் உள்ளன. சோக்சி இந்திய குடிமகன் அல்ல. அவர் ஆன்டிகுவா குடிமகன். அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடியாது. அதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. சோக்சி காணாமல் போனதிலும், டொமினிக்காவில் கைதானதிலும் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
29-மே-202113:29:50 IST Report Abuse
vasan மூஞ்ச பாத்தாலே தெரியுது ...இவன் மொடா முழிங்கி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X