பொது செய்தி

இந்தியா

மதிய உணவு திட்டம்: மாணவர்களுக்கு 'டிபாசிட்'

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :மதிய உணவு திட்டத்தின்கீழ் சமைக்கப்படும் உணவுக்கு ஆகும் செலவில், மத்திய அரசின் பங்கை, மாணவர்களின் வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் இயங்காததால், மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில்
மதிய உணவு ,திட்டம் மாணவர்கள்,  'டிபாசிட்'

புதுடில்லி :மதிய உணவு திட்டத்தின்கீழ் சமைக்கப்படும் உணவுக்கு ஆகும் செலவில், மத்திய அரசின் பங்கை, மாணவர்களின் வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் இயங்காததால், மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் ஏழை, எளிய மாணவர்கள், உண்ண உணவின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.இந்நிலையில், அவர்களின் நலனை கருத்தில் வைத்து, மதிய உணவு திட்டத்தின்கீழ் சமைக்கப்படும் உணவுக்கு ஆகும் செலவில், மத்திய அரசின் பங்கை, மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


வடகிழக்கு மாநிலங்களை தவிர, மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், 60:40 என்ற விகிதத்தில், சமையல் செலவை, மத்திய - மாநில அரசுகள் பங்கிட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீரை பொறுத்தவரை, 90:10 என்ற விகிதத்தில், செலவை பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்த சமையல் செலவுக்கான மத்திய அரசின் பங்கை, மாணவர்களின் வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 11.8 கோடி பேர் வரை, இதனால் பயனடைவர் எனக் கூறப்படுகிறது. இதற்காக, 1,200 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
29-மே-202116:35:22 IST Report Abuse
Arasu புரிஞ்சுருச்சு வங்கில போடுறேன்னு சொல்வான்...அப்புறம் அவ்வளவு தான் ..அப்புறம் மதிய உணவையே இல்லேன்ட்றவங்க
Rate this:
Cancel
Gnana K - New Delhi,இந்தியா
29-மே-202115:20:33 IST Report Abuse
Gnana K என்னது மதிய உணவு திட்டத்துல மத்திய அரசு பங்கா...? இது வரை மாநில அரசின் செலவுலதான் மதிய உணவு திட்டம் நடைபெறுகிறது என்றல்லவா நினைத்து இருந்தேன்
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
29-மே-202112:22:44 IST Report Abuse
Ganesh Shetty அருமையான திட்டம் இதுபோல் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை அந்தந்த குடிமகன்களுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் செலுத்தி வாழ்க்கை மேம்பாடடையச் செய்வது மிகவும் வரவேற்க தக்கது, பாராட்டுக்கள் நமது பாரத பிரதமர் திரு. மோதிஜி அவர்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X