கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் நெடுமரத்தில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,' உண்மை மெதுவாக மக்களிடம் சேரும். வதந்திகள் தீயாக பரவும்.
மக்கள் வதந்திகளை நம்பாமல் தடுப்பூசி போடலாம் ' என்றார்கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் சகாயம் ஜெரால்ட் ராஜ் வரவேற்றார்.முகாமை துவக்கி வைத்து அமைச்சர் பேசியதாவது: ஒன்றரை ஆண்டாக அச்சுறுத்தும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள மருத்துவ வழிமுறைகள் அறிவிக்கப்பட்டும் மக்கள் பலரும் கடைபிடிப்பதில்லை. முதல் அலையில் கிடைக்காத வாய்ப்பு தடுப்பூசி. இந்திய மருத்துவக் கழகம் அனுமதித்தும், முன் களப்பணியாளர்கள் 'போட்டும் மக்களிடம் தயக்கம் உள்ளது.
வேறு காரணங்களால் இறந்தவர்கள் தடுப்பூசி போட்டதால் இறந்ததாக பரவிய வதந்திகளே மக்களிடம் தயக்கம் ஏற்படக் காரணம். உண்மை மெதுவாகத்தான் மக்களிடம் சேரும். கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாற ஒத்துழைப்பு தாருங்கள்' என்றார். நடமாடும் மருத்துவக் குழுவினர், கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE