தமிழ்நாடு

நிற்கட்டுமா...போகட்டுமா! சிறப்பு வார்டாக மாற்றப்பட்ட  ரயில் பெட்டிகள் காத்திருப்பு

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள், பயன்பாடின்றி காத்து நிற்கின்றன. ரயில்வே ஊழியர்களும் தனிமைப்படுத்தும் தேவைக்கு, கோரிக்கை விடுக்கின்றனர்.கொரோனா பரவல் முதல் அலையால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடந்தாண்டு ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வார்டுகளாக
 நிற்கட்டுமா...போகட்டுமா! சிறப்பு வார்டாக மாற்றப்பட்ட  ரயில் பெட்டிகள் காத்திருப்பு

கோவை:கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள், பயன்பாடின்றி காத்து நிற்கின்றன. ரயில்வே ஊழியர்களும் தனிமைப்படுத்தும் தேவைக்கு, கோரிக்கை விடுக்கின்றனர்.கொரோனா பரவல் முதல் அலையால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடந்தாண்டு ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டன.
சேலம் ரயில்வே கோட்டம், கோவை ரயில்வே பணிமனையில், 'ஏசி' வசதி இல்லாத, 18 ரயில் பெட்டிகள், சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டன.ஒவ்வொரு கேபினிலும் ஒரு படுக்கை, கழிவறை, பிளாஸ்டிக் திரைச்சீலை, தண்ணீர் வசதி என நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன.
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக, சேலம் கோட்டத்தில், 30 பெட்டிகள் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டு, சேவைக்காக காத்து நிற்கின்றன. கோவையில் கொரோனா அதிகரிப்பால், ஆக்சிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இச்சூழலில், போத்தனுார் ஸ்டேஷனில் பல மாதங்களாக பயன்பாடின்றி காத்து நிற்கும், சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்ட, 18 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.

இதன் மூலம், 150க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க முடியும். கோவை ரயில்வே பணிமனை ஊழியர்கள், 38 பேர் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் வெளியூரை சேர்ந்த பலர், சக ஊழியர்களுடன் குழுவாக, வாடகைக்கு அறை எடுத்துள்ளனர்.
இதனால், தனிமைப்படுத்துவதில் சிரமம் உள்ளது. எனவே, நோய் பாதிப்புக்கு ஆளான வெளியூர்களை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு, தனிமைப்படுத்தும் தேவைக்காகவும், கொரோனா சிறப்பு வார்டு பெட்டிகளை ஒதுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, ''மாநில அரசு கேட்டுக்கொண்டால், 'கோவிட்' சிறப்பு வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை, சிகிச்சைக்கு வழங்க தயாராக உள்ளோம். நோய் பாதிப்புக்குள்ளான ஊழியர்கள் பலர், ரயில்வே குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். தேவை இருப்பின் தனிமைப்படுத்த, இப்பெட்டிகளை வழங்கவும் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X