தடுப்பூசியை வீணாக்குவதில் தமிழகம் மூன்றாவது இடம்| Dinamalar

'தடுப்பூசியை வீணாக்குவதில் தமிழகம் மூன்றாவது இடம்'

Added : மே 29, 2021 | கருத்துகள் (14) | |
கோவை:''நாட்டிலேயே தடுப்பூசிகளை வீணாக்குவதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.கோவை பா.ஜ., அலுவலகத்தில் அவர் கூறியதாவது: மாநில அரசு கையிருப்பில் வைத்து இருக்கும் தடுப்பூசிகளை, மக்களுக்கு கொண்டு செல்லாமல், தொடர்ந்து மத்திய அரசிடம் தடுப்பூசி கேட்பது நியாயமல்ல. முதலில் கையிருப்பு தடுப்பூசிகளை, இரண்டு நாட்களில்
 'தடுப்பூசியை வீணாக்குவதில் தமிழகம் மூன்றாவது இடம்'

கோவை:''நாட்டிலேயே தடுப்பூசிகளை வீணாக்குவதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை பா.ஜ., அலுவலகத்தில் அவர் கூறியதாவது: மாநில அரசு கையிருப்பில் வைத்து இருக்கும் தடுப்பூசிகளை, மக்களுக்கு கொண்டு செல்லாமல், தொடர்ந்து மத்திய அரசிடம் தடுப்பூசி கேட்பது நியாயமல்ல. முதலில் கையிருப்பு தடுப்பூசிகளை, இரண்டு நாட்களில் மக்களுக்கு செலுத்த வேண்டும்.

நாட்டிலேயே தடுப்பூசிகளை வீணாக்குவதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் தடுப்பூசி தயாரிப்பில், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'கொரோனா விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்' எனக் கூறி வருகிறார்.

ஆனால், மக்களுக்காக பணி செய்வதற்காக தான், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறோம். மக்கள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அனைவரும் சேர்ந்து தான் அரசியல் செய்ய வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X