பிராமணர்களுக்கு பாதிப்பு ; கவர்னருக்கு சாமி கடிதம்

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021 | கருத்துகள் (162)
Advertisement
சென்னை : 'தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தலைமை செயலரிடம் அறிக்கை கேட்டு, உரிய நடவடிக்கை எடுங்கள்' என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில்

சென்னை : 'தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தலைமை செயலரிடம் அறிக்கை கேட்டு, உரிய நடவடிக்கை எடுங்கள்' என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடிதம் எழுதி உள்ளார்.latest tamil newsகடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் பொறுப்பேற்ற தி.மு.க., அரசின் ஆதரவு காரணமாக, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பிராமணர்களை குறி வைப்பதும், அவர்கள் மீது வார்த்தை தீவிரவாத தாக்குதல் நடத்துவதும், ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின், துவக்க கால நிகழ்வை ஒத்திருக்கிறது.தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகள் குறி வைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் பிராமணர்கள்.


latest tamil newsதமிழகத்தில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழல் குறித்து, நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த பதட்டமான சூழல் ஏற்பட, திராவிட கழகம், தி.மு.க.,வில் உள்ள சிலர் மற்றும் விடுதலை புலி ஆதரவாளர்கள் காரணம்.புதிய அரசு பொறுப்பேற்று, தன் பணியை துவக்கும் ஆரம்ப நிலையில், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டப்பிரிவு, 356ஐ பயன்படுத்த வேண்டும் எனக்கூற இயலவில்லை; எனினும், இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.எனவே, தலைமை செயலரை அழைத்து, பிராமணர்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என, அறிக்கை கேட்க வேண்டும். அவரை ஆலோசித்து, அந்த அறிக்கை மீது, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நீங்கள் எடுக்க வேண்டும்.இவ்வாறு, சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (162)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraju - KUALA LUMPUR,மலேஷியா
03-ஜூன்-202112:33:07 IST Report Abuse
selvaraju samy stop your drama
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-202114:54:42 IST Report Abuse
Abdul Aleem ஐயா தமிழக அரசுக்கு தெரியும் அவர்களை பாதுகாப்பதற்கு நீங்க கோவெர்னேரிடம் பாத்து காப்பு கோருவது குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்டவர்களுக்கு
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
31-மே-202109:56:37 IST Report Abuse
Venkataramanan Thiru ஸ்வாமிஜி ரொம்ப அவசரப்படுகிறார்.மதுரை நிகழ்ச்சியை மறந்து விட்டார் போலும்.
Rate this:
Kumar Krishnas - Milton Keynes,யுனைடெட் கிங்டம்
02-ஜூன்-202114:17:00 IST Report Abuse
Kumar Krishnasசிலரை திகாரில் கலி திங்க வைத்ததும் இதே சாமி தான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X