தமிழ்நாடு

அதிகரிப்பு: விழுப்புரத்தில் கொரோனா இறப்பு...கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை

Added : மே 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை மாவட்டத்திலேயே அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 31,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 27,541 பேர் நோயில் இருந்து குணமடைந்தள்ளனர். 4,187 பேர் சிகிச்சையில்
 அதிகரிப்பு: விழுப்புரத்தில் கொரோனா இறப்பு...கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை மாவட்டத்திலேயே அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 31,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 27,541 பேர் நோயில் இருந்து குணமடைந்தள்ளனர். 4,187 பேர் சிகிச்சையில் உள்ளனர். 226 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 18,076 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 2,35,075 பேரிடம் ஸ்வாப் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அதிகம் பாதித்த 123 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் 1,33,517 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும், 16,550 கோவிஷீல்டு மற்றும் 2,470 கோவாக்சின் டோஸ்கள் இருப்பு உள்ளது.மாவட்டத்தில், அதிகப்பட்சமாக விழுப்புரம் நகராட்சியில் 6,694 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று கொரோனா தொற்றால் விழுப்புரம் நகராட்சியில் அதிகப்பட்சமாக 63 பேர் இறந்துள்ளனர். இதேபோன்று, திண்டிவனம் நகராட்சியில் தொற்று எற்பட்ட 2,148 பேரில், 22 பேரும், செஞ்சி ஒன்றியத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 2,189 பேரில் 22 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.எனவே, மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு பாதிப்பு அதிகரித்து வரும் விழுப்புரம் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விபரம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
29-மே-202118:18:22 IST Report Abuse
oce அடுத்து திண்டி வனத்திலிருந்து மீளவும் சென்னைக்கு தாவும். ஊரடங்கு குரோனாவை குறைக்குமே தவிர அதன் தொற்றை தொடர்ந்து கொண்டே இருக்கும். தனிமனித. வைரஸ் தற்காப்பு கண்டு கவசம் பிடிக்கும் வரை உலகில் குரோனாவுக்கு அழிவே இல்லை.தடுப்பூசிகளின் பவர் உடலில் எவ்வளவு நாளைக்கு இருக்கும் என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை. ஒரு பக்கம் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டே இருப்பார்கள்இன்னொரு பக்கம் குரோனாவை மனித கூட்டத் தேவைகள் வெளி புழக்கத்தில் தொற்ற வைத்துக் கொண்டிருக்கும். ஊரடங்கில் வேளைக்கு சரியான உணவின்றி வீட்டுக்குள் வாடும் கூட்டங்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே இருக்கும்.ஊரடங்கை தளர்த்தி எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் வெளியே நடமாடும் போது குரோனா மீண்டும் தொற்றும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X