அதிகரிப்பு: விழுப்புரத்தில் கொரோனா இறப்பு...கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை| Dinamalar

தமிழ்நாடு

அதிகரிப்பு: விழுப்புரத்தில் கொரோனா இறப்பு...கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை

Added : மே 29, 2021 | கருத்துகள் (1)
Share
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை மாவட்டத்திலேயே அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 31,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 27,541 பேர் நோயில் இருந்து குணமடைந்தள்ளனர். 4,187 பேர் சிகிச்சையில்
 அதிகரிப்பு: விழுப்புரத்தில் கொரோனா இறப்பு...கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை மாவட்டத்திலேயே அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 31,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 27,541 பேர் நோயில் இருந்து குணமடைந்தள்ளனர். 4,187 பேர் சிகிச்சையில் உள்ளனர். 226 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 18,076 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 2,35,075 பேரிடம் ஸ்வாப் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அதிகம் பாதித்த 123 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் 1,33,517 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும், 16,550 கோவிஷீல்டு மற்றும் 2,470 கோவாக்சின் டோஸ்கள் இருப்பு உள்ளது.மாவட்டத்தில், அதிகப்பட்சமாக விழுப்புரம் நகராட்சியில் 6,694 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று கொரோனா தொற்றால் விழுப்புரம் நகராட்சியில் அதிகப்பட்சமாக 63 பேர் இறந்துள்ளனர். இதேபோன்று, திண்டிவனம் நகராட்சியில் தொற்று எற்பட்ட 2,148 பேரில், 22 பேரும், செஞ்சி ஒன்றியத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 2,189 பேரில் 22 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.எனவே, மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு பாதிப்பு அதிகரித்து வரும் விழுப்புரம் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விபரம்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X