தேர்வு : அரசு கல்லூரிகளில் ஜூனில் செமஸ்டர்... கட்டணமின்றி நடத்த பெற்றோர் கோரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

தேர்வு : அரசு கல்லூரிகளில் ஜூனில் செமஸ்டர்... கட்டணமின்றி நடத்த பெற்றோர் கோரிக்கை

Added : மே 29, 2021
Share
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு நடைபெற உள்ள இரண்டாம் செமஸ்டர் தேர்வினை, கட்டணமின்றி நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி செமஸ்டர் தேர்வு துவங்க உள்ளதாக, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தேர்வு கட்டணமாக, பாடத்திற்கு ரூ .90 வீதம், 8
 தேர்வு : அரசு கல்லூரிகளில் ஜூனில் செமஸ்டர்... கட்டணமின்றி நடத்த பெற்றோர் கோரிக்கை

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு நடைபெற உள்ள இரண்டாம் செமஸ்டர் தேர்வினை, கட்டணமின்றி நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி செமஸ்டர் தேர்வு துவங்க உள்ளதாக, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தேர்வு கட்டணமாக, பாடத்திற்கு ரூ .90 வீதம், 8 பாடத்திற்கு ரூ.720, விண்ணப்ப, மதிப்பெண் பட்டியலுக்கு ரூ.150 என மொத்தமாக 870 ரூபாய் செலுத்த வேண்டும்.இந்த கட்டணம் பல்கலைகழகங்களுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக, தன்னாட்சி கல்லுாரிகளில் தேர்வுக்கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தேர்வுகட்டணம், வினாத்தாள், விடைத்தாள் தயாரித்தல், போக்குவரத்து செலவினம், மேற்பார்வையாளர்கள் ஊதியம், விடைத்தாள் திருத்துதல் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப் படுகிறது.நடப்பு கல்வியாண்டில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற முதல் செமஸ்டர் தேர்வின் போது, மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, திடீரென இணையதளம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. அதாவது, விடைத்தாள் மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும். வினாத்தாள் இணையம் வாயிலாக அனுப்பப்படும்,

மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு தேர்வு எழுதி விடைத்தாளை கல்லுாரியில் சமர்ப்பித்தனர்.இதன் மூலம் போக்குவரத்து செலவினம், நிர்வாக செலவுகள், மேற்பார்வையாளர் ஊதியம் என 70 சதவீத செலவினம் தவிர்க்கப்பட்டது. அதாவது, மாணவர்களிடம் வசூலித்த தொகையில் சிறிதளவு பணம் மட்டுமே தேர்வுக்காக செலவானது.தற்போது, கொரோனா பரவலால் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் செமஸ்டருக்கான தேர்வு கட்டணத்தை அனைத்து மாணவர்களிடமும் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வங்கிகளின் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் வங்கி மூலமாகவும் பணத்தை செலுத்த முடியாது.

குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் வேலையின்றியும், வருமானமிழந்தும் தவிக்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, இரண்டாம் செமஸ்டர் தேர்வினை இலவசமாக நடத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நமதுநிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X