தமிழ்நாடு

342! காய்கறிகள், மளிகை சப்ளை செய்ய வாகனங்கள்..... கிராமங்களில் கொரோனா பரவாமல் இருக்க

Added : மே 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை : கிராமங்களிலிருந்து மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க காய்கறிகள், மளிகை பொருட்களை நேரில் சென்று சப்ளை செய்ய 342 தனியார் வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை நகர்ப்புறங்களை மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பரவி வருகிறது. மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊரடங்கால் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க கிராமத்தினர்
342! காய்கறிகள், மளிகை சப்ளை செய்ய வாகனங்கள்..... கிராமங்களில் கொரோனா பரவாமல் இருக்க

மதுரை : கிராமங்களிலிருந்து மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க காய்கறிகள், மளிகை பொருட்களை நேரில் சென்று சப்ளை செய்ய 342 தனியார் வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை நகர்ப்புறங்களை மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பரவி வருகிறது. மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊரடங்கால் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க கிராமத்தினர் அருகிலுள்ள நகர்ப்புறங்களுக்கு வருகின்றனர். அவர்கள் மூலம் கொரோனா பரவலுக்கு வாய்ப்புள்ளது. இதை தடுக்க கிராமங்களில் காய்கறிகள், மளிகை பொருட்களை சப்ளை செய்ய கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டார். அதன்படி 342 தனியார் வாகனங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையில் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.

மேலும் பரவலை கட்டுப்படுத்த அனைத்து கிராமங்களிலும் பிளீச்சிங் பவுடர் துாவுதல், கிருமி நாசினி மருந்து தெளித்தல், முகக்கவசம் வழங்குதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொற்றுள்ள பகுதிகளை தனிமைப்படுத்தவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கிடைக்க செய்யவும் சமூக ஆர்வலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாமில் தொற்று அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்தால் அவர்கள் அந்தந்த பகுதியிலேயே தனிமைப்படுத்தி, கிராமங்களில் அமைக்கப்படும் கொரோனா மினி கேர் சென்டர்களில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
31-மே-202105:33:23 IST Report Abuse
Manian அக்கா பூங்காவனம், கொரானவிலே எப்படியும் சாகப் போறோம்: அப்ப வாய்க்கு ருசியா மீன் கொளம்பு, வெண்டைக்காய் கறி, நெல்லூர் பொன்னி சோத்தை உள்ளே தள்ளறதிலே என்னா தப்பு? மருமவளே மல்லிக்கொளுந்து, நரக வாசல்லே மாமூல் கொடுக்க என்னா செய்றதுன்னு புரியலை அதுதேன் இப்பத்திய கவலை??
Rate this:
Cancel
Sreenivas Jeyaraman - Madurai,இந்தியா
29-மே-202119:57:10 IST Report Abuse
Sreenivas Jeyaraman In our K.Pudur Madurai Lourdhu Nagar area till yesterday no vegi MC Vechile came... When i just inform the same via Madurai Corporation Whatsapp number 84284 25000 ... I GOT intimation that MC will come at doorstep to sell Vegis pack ...and as assured we got the same... Really Appreciate the Madurai Corporation for their support.. Need to inform commo. Public about the Good things also...
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
29-மே-202117:45:22 IST Report Abuse
oce தமிழ் நாட்டில் மதுரையை தவிர எல்லா இடங்களிலும் வீடுகளுக்கு நேரில் சப்ளை செய்ய காய்கறி கடைகளை திறந்தாச்சா. இப்போ மதுரை ஒண்ணுதான் பாக்கியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X