ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை| Dinamalar

ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021 | கருத்துகள் (136) | |
பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில்
Thamarai, PSBB, Padma Seshadri Bala Bhavan

பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...

சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில் உயர்படியில் இருப்பதாக தோற்றம் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. ராசகோபாலன் சிறையில். எவ்வளவு வேகமான நடவடிக்கை. வரவேற்க வேண்டும். கல்வி அமைச்சருக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகள். அப்படியே கொஞ்சம் திரும்பி பார்ப்போமா.

மூன்றாண்டுகளுக்கு முன் சின்மயி உட்பட 13 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டின்போது ஊடகமும் சமூகமும் அரசும் பெண்ணுரிமை போராளிகளும் என்ன செய்தனர். சின்மயி பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்துக்காக அடித்து துவைக்கப் பட்டார். அவர் தொழில் பாதிக்கப்பட்டு தொந்தரவு கொடுத்து அலைக்கழிக்கப்பட்டார். இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. தனியொரு பெண்ணாக நின்று போராடுகிறார்.

முகிலன் என்றோர் ஊரறிந்த 'போராளி'... ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக ஏமாற்றி, ஓடி ஒளிந்து 'கடத்தல்' நாடகம் ஆடுகிறார். வழக்கு பதிவான பிறகே கண்டுபிடிக்கப்பட்டு கைது ஆகிறார். ஆனால் பிணையில் வெளியே வந்து மீண்டும் தொழில் ஆரம்பித்தாகி விட்டது. அதற்கு முன், தோழர் தியாகு என்று அழைக்கப்பட்ட, கைதேர்ந்த, முகிலனுக்கெல்லாம் முன்னோடி போராளி,பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளி, உதவிநாடி வந்தவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தமிழ்கூறும் நல்லுலகுக்கு தெரிந்த சங்கதி.


latest tamil newsமெத்தப்படித்த மேதாவி சுபவீ களவாணி என்பதும் அறிந்தது. ஆனால் நடந்தது என்ன. குழந்தையோடு நான் தெருவுக்கு வந்ததுதான் மிச்சம். இன்றைக்கு ஆவேசமாக நெற்றிக்கண் திறக்கும் நக்கீரர்களும், இழுத்து வந்து தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும் என்று பொங்கும் களஞ்சியங்களும் அன்று செய்தது என்ன. ராஜகோபாலன்களுக்கும் வைரமுத்து, தியாகு, முகிலன்களுக்கும் என்ன வேறுபாடு?

ஒரு பார்ப்பன பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள், திராவிட பொறுக்கி என்றால் ஒத்துவீர்களோ. பாலியல் குற்றம் நிகழ்ந்தால் சாதி மதம் சமூக நிலை பதவி பணபலம் எதையும் பாராமல் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்க வேண்டும். அதுதான் அறம். மாறாக, பக்கம் பார்த்துதான் பொங்குவேன் என்றால் அதற்கு பெயர் பச்சோந்தித்தனம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X