கணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் இணைந்த மனைவி : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021 | கருத்துகள் (27)
Advertisement
புதுடில்லி : புல்வாமா தாக்குதலில் ராணுவ மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவர் வீரமரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி ராணுவத்தில் இணைந்து நாட்டை காக்க கிளம்பிவிட்டார். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கடந்த 2019ல் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக
NitikaKaul, IndianArmy, Pulwama

புதுடில்லி : புல்வாமா தாக்குதலில் ராணுவ மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவர் வீரமரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி ராணுவத்தில் இணைந்து நாட்டை காக்க கிளம்பிவிட்டார். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கடந்த 2019ல் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது இந்தியா. புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவரும் வீர மரணம் அடைந்தார். திருமணமாகி 9 மாதங்களில் இவர் வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில் இவரின் மனைவி நிதிகா கவுல் ராணுவத்தில் இணைந்துள்ளார். பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடந்தது. இதில் நிதிகா சவுல் முறைப்படி ராணுவத்தில் இணைந்தார்.

2018ல் புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் வீரமரணமடைந்தார். கணவரை இழந்த சோகத்தில் மூழ்கி கிடக்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ராணுவ பயிற்சியில் சேர்ந்தார் மனைவி நிக்கிதா கவுல். சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அவருக்கு, இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜென்ரல் ஒய்.கே ஜோஷி ஸ்டார்கள் வழங்கி ராணுவத்தில் இணைத்தார்.

நிதிகா கவுல் கூறுகையில், என் கணவர் கடந்து வந்த அதே பயணத்தை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பார் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.


latest tamil newsகணவர் வழியில் நாட்டை காக்க இவர் ராணுவத்தில் இணைந்த நிகழ்வு டுவிட்டரில் #NitikaKaul, #IndianArmy, #Pulwama உள்ளிட் ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. பலரும் அவரை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.

‛‛சில நிஜ கதைகள் உங்கள் இதயத்தை பெருமையுடன் நிரப்பும். நிகிதா கவுல் தனது தியாக கணவர் மேஜர் விபூதி எஸ்.தவுந்தியாலை பின்பற்றி இந்திய ராணுவத்தில் சேருவதைப் பார்ப்பது மறக்க முடியாத ஒரு உண்மையான கதை. ஜெய் ஹிந்த்''.

"இது தான் பெண்களுக்கான உண்மையான அதிகாரமளித்தல், இந்தியாவின் பெருமை நிதிகா கவுல். ஜெய்ஹிந்த்''.

‛‛மறைந்த மேஜர் விபூதி தவுந்தியாலுக்கு இது மிகப்பெரிய அஞ்சலி''.

‛‛இந்தியாவின் வீரமங்கையே, நீ தான் எங்களின் நாட்டின் பெருமைமிகு பெண், வாழ்த்துக்கள்''.
‛‛நீங்கள் தான் இன்றைய அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்மாதிரி, உங்களை பார்த்து நாடு பெருமை கொள்கிறது''.

‛‛அசாத்தியமான ஆணும் பெணும் தான் இந்தியாவை சிறந்தவர்களாக ஆக்குகிறார்கள். தாய்நாட்டின் மிகச்சிறந்த மகன்கள் மற்றும் மகள்கள் இவர்கள். தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கான இவர்களின் அர்ப்பணிப்பு இந்த தலைமுறையினருக்கு உத்வேகமாக அமையும்''.

இப்படி பலரும் தங்களது வாழ்த்தை கருத்தாக பதிவிட்டு வீரமங்கை நிதிகாவை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
30-மே-202113:48:45 IST Report Abuse
Rafi பல லெச்சம் ராணுவ வீரர்களோடு இருக்கும் அப்பகுதியில் சர்வ சாதாரணம்மாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தும் நிலையில் நம் பாதுகாப்பில் கோட்டை விட்ட அரசு தான் முதல் குற்றவாளி, வழக்கம்மான நடைமுறை முன் எச்சரிக்கையை கூட அப்போது எடுக்க தவறியதே நம் வீரார்கள் பலியாக காரணம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். முறையான விசாரணை நடந்தால் எதற்காக நடத்தப்பட்டது, அரசியல் பயன் அடைய காவு வாங்கினார்களா? என்பது போன்ற சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கிறது அதற்கான விடை கிடைக்கும். இடையில் ஏற்கனவே குற்றச்சாட்டில் பதிவாகியுள்ள காவல் அதிகாரி வேறு தீவிரவாதிகளுடன் காரில் சென்றதாக கைதாகிய வழக்கின் நிலை அமுக்கப்பட்டுவிட்டது? குறுகி காலத்திற்கு உண்மை மறைந்திருக்கலாம், தாமதமானாலும் உண்மை வெளிவந்தே தீரும்.
Rate this:
KAS - Lagos,நைஜீரியா
03-ஜூன்-202114:51:10 IST Report Abuse
KASthat incident happened in early 2019 in later 2019 what is required to be done had been done by the govt. (removing Article 370 and making 2 Union Territories)...
Rate this:
Cancel
Vimalathithan - Abu Halifa,குவைத்
30-மே-202110:17:21 IST Report Abuse
Vimalathithan வாழ்த்துக்கள் நீடூழி பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க ஆரோக்கியமுடன் ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-மே-202109:26:15 IST Report Abuse
RajanRajan OTS - OFFICERS TRAINING SCHOOL, ST. THOMAS MOUNT என்பது பாரம்பரியமிக்க ராணுவ பயிற்சி கூடம். அத்தனை பெருமை மிக்க கேந்திரம். அங்கு பயிற்சி என்பது அத்தனை எளிதானதல்ல, மிக கடுமையான பயிற்சி கூடம். வீரம் செறிந்த மண்ணிலே, வெற்றி என்னும் நடையை காட்டு எனும் உயிரோட்டம் மிக்க பாடல் வரிகள் உள்ளத்தை நெருடுகிறது. இந்த வீர பெண்மணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவருடைய வெற்றி நடை தொடர அந்த இறைவன் அருள் புரிவாரகக. ராணுவ சேவை என்பது அத்தனை மகத்தான ஓன்று. ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
31-மே-202112:27:37 IST Report Abuse
SaiOTS - OFFICERS TRAINING SCHOOL, ST. THOMAS MOUNT என்பது பாரம்பரியமிக்க ராணுவ பயிற்சி கூடம். அத்தனை பெருமை மிக்க கேந்திரம். உண்மையை சொல்றாரு அப்படியிருக்க அங்கே வாசலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வேறே பெயரிட்டதேனாம்? போகட்டும் இப்போதாவது அந்த பெயரை வைத்து அந்த பெருமை மிக்க கேந்திரத்துக்கு உரிய மரியாதை செய்ய பாருங்களேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X