புதுடில்லி : புல்வாமா தாக்குதலில் ராணுவ மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவர் வீரமரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி ராணுவத்தில் இணைந்து நாட்டை காக்க கிளம்பிவிட்டார். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
கடந்த 2019ல் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது இந்தியா. புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவரும் வீர மரணம் அடைந்தார். திருமணமாகி 9 மாதங்களில் இவர் வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில் இவரின் மனைவி நிதிகா கவுல் ராணுவத்தில் இணைந்துள்ளார். பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடந்தது. இதில் நிதிகா சவுல் முறைப்படி ராணுவத்தில் இணைந்தார்.
நிதிகா கவுல் கூறுகையில், என் கணவர் கடந்து வந்த அதே பயணத்தை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பார் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

கணவர் வழியில் நாட்டை காக்க இவர் ராணுவத்தில் இணைந்த நிகழ்வு டுவிட்டரில் #NitikaKaul, #IndianArmy, #Pulwama உள்ளிட் ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. பலரும் அவரை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.
‛‛சில நிஜ கதைகள் உங்கள் இதயத்தை பெருமையுடன் நிரப்பும். நிகிதா கவுல் தனது தியாக கணவர் மேஜர் விபூதி எஸ்.தவுந்தியாலை பின்பற்றி இந்திய ராணுவத்தில் சேருவதைப் பார்ப்பது மறக்க முடியாத ஒரு உண்மையான கதை. ஜெய் ஹிந்த்''.
"இது தான் பெண்களுக்கான உண்மையான அதிகாரமளித்தல், இந்தியாவின் பெருமை நிதிகா கவுல். ஜெய்ஹிந்த்''.
‛‛மறைந்த மேஜர் விபூதி தவுந்தியாலுக்கு இது மிகப்பெரிய அஞ்சலி''.
‛‛இந்தியாவின் வீரமங்கையே, நீ தான் எங்களின் நாட்டின் பெருமைமிகு பெண், வாழ்த்துக்கள்''.
‛‛நீங்கள் தான் இன்றைய அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்மாதிரி, உங்களை பார்த்து நாடு பெருமை கொள்கிறது''.
‛‛அசாத்தியமான ஆணும் பெணும் தான் இந்தியாவை சிறந்தவர்களாக ஆக்குகிறார்கள். தாய்நாட்டின் மிகச்சிறந்த மகன்கள் மற்றும் மகள்கள் இவர்கள். தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கான இவர்களின் அர்ப்பணிப்பு இந்த தலைமுறையினருக்கு உத்வேகமாக அமையும்''.
இப்படி பலரும் தங்களது வாழ்த்தை கருத்தாக பதிவிட்டு வீரமங்கை நிதிகாவை பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE