" பிரதமர் காலில் விழத்தயார் "- மம்தா

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021 | கருத்துகள் (69) | |
Advertisement
புதுடில்லி: ‛‛ என் காலில் விழுந்தால் மேற்கு வங்கத்திற்கு உதவுவேன் என பிரதமர் கூறியிருந்தால், அதனை செய்வதற்கு நான் தயார்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, 'யாஸ்' புயல் பாதிப்புகள் குறித்து, 15 நிமிடங்கள் விளக்கிய முதல்வர் மம்தா பானர்ஜி, அதன் பின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஆய்வு கூட்டத்தில்
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம், west bengal, cyclone yaas

புதுடில்லி: ‛‛ என் காலில் விழுந்தால் மேற்கு வங்கத்திற்கு உதவுவேன் என பிரதமர் கூறியிருந்தால், அதனை செய்வதற்கு நான் தயார்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, 'யாஸ்' புயல் பாதிப்புகள் குறித்து, 15 நிமிடங்கள் விளக்கிய முதல்வர் மம்தா பானர்ஜி, அதன் பின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றார். இதற்கு மத்திய அரசும், பாஜ., தலைவர் நட்டா, மேற்கு வங்க கவர்னர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், இதில், எங்கள் தவறு என்ன என நீங்கள் தான் கூற வேண்டும். இந்த கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? எனது காலில் விழுந்தால் தான் மேற்கு வங்கத்திற்கு உதவுவேன் என பிரதமர் கூறினால், அதனை செய்ய நான் தயார். ஆனால், என்னை அவமானப்படுத்தாதீர்கள்.latest tamil newsமாநில விவகாரங்கள் தொடர்பான கூட்டங்களில், அதிகாரிகள் எப்போது பங்கேற்றார்கள். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததால், நீங்கள் அதுபோன்று நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தும் தோல்வி அடைந்துள்ளீர்கள். எங்கள் மீது தினமும் கோபத்தை காட்டுவது ஏன்? வெள்ளச்சேதம் ஆய்வுக்கூட்டத்தில் கவர்னருக்கும், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் என்னவேலை? இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
30-மே-202112:40:30 IST Report Abuse
Lawrence Ron இத்தினி பேர்ல ஒரு சங்கி கூட மாநில முதல்வரின் கேள்விக்கு பதில் கூறவில்லை. பதில் இல்லை என்றால் திட்டுவதுதான் இவர்களின் வழக்கம். //எங்கள் மீது தினமும் கோபத்தை காட்டுவது ஏன்? வெள்ளச்சேதம் ஆய்வுக்கூட்டத்தில் கவர்னருக்கும், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் என்னவேலை? இவ்வாறு அவர் கூறினார்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
31-மே-202112:43:18 IST Report Abuse
Visu Iyerதகுதியும் திறமையும் உள்ளவர்கள் தான் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களை போலவே எல்லோருக்கும் இருக்கு.. என்ன செய்ய......
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
30-மே-202104:46:56 IST Report Abuse
meenakshisundaram வேண்டாம்ம்மா இன்னொரு காலும் ஒடஞ்சிடப்போவுது
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
30-மே-202100:56:45 IST Report Abuse
unmaitamil உன் அழிவுக்கு முன், நீ செய்த பாவங்களுக்கு,. காலில் பொய்க்கட்டு போட்டு மக்களை ஏமாற்றியதற்கு பலரது காலின் நீ விழவேண்டிவரும். அதனால்தான் இந்த வார்த்தைகளை ஆண்டவன் உன்னை பேசவைக்கிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X