கோவிட் தொற்றுக்கு முடிவுகட்ட 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெனிவா: 'கோவிட்19 தொற்றை முடிவுக்கு கொண்டுவர 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக்

ஜெனிவா: 'கோவிட்19 தொற்றை முடிவுக்கு கொண்டுவர 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news



உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.


latest tamil news



கோவிட் தொற்று குறைந்தால் தொற்று முடிந்துவிட்டதாக எண்ணிக் கூடாது. பல்வேறு நாடுகளில் பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

உலக மக்கள் தொகையில் இதுவரை 10 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
30-மே-202112:20:01 IST Report Abuse
J. G. Muthuraj ஆமப்பா....ஆமா....இந்தியாவில் பத்து சதவிகிதம் தான் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் என குறைபாடாக சொல்கிறீர்களே.....எங்களுடைய பத்து சதவிகிதம், பிரிட்டன் ஜனத்தொகையை விட இரண்டரை மடங்கு.......எதோ பிரிட்டன் முழுவதும் போட்டுவிட்டார்களாம்.....வளரும் நாடாகிய ஜனத்தொகை மிகுந்த இந்தியா செய்கிற சேவையை பாராட்டாமல், எங்களை குறைத்து மதிப்பிட்டு வளர்ந்த நாடுகளை சாதனையாளர்களாக காண்பிக்கிறீர்களாக்கும்...இந்தியாவில் 70% தடுப்பூசி போட உலக சுகாதார அமைப்பு என்ன STRATEGY வைத்திருக்கிறீர்கள்?.......
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
29-மே-202122:27:29 IST Report Abuse
Tamilan இதை கூற, அதுவும் ஓராண்டுக்கு பின் கூற ஏன் ஒரு சுகாதார அமைப்பு ? இது எப்படி வந்தது ? இதை எப்படி தவிர்ப்பது என்பதை யார் கண்டுபிடிப்பது ?. தடுப்பூசியால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றோ, பரவலை தடுக்க முடியும் என்றோ எங்கும் நிரூபணமாகவில்லை . தடுப்பூசியால், கொரோனா தாக்கப்பட்டவருக்கு பாதிப்பு இல்லை என்று மட்டுமே கூற முடியும். அதுவும் இவர்கள் கூறுமளவுக்கு உண்மையா, அந்த அளவுக்கு பயனளித்ததா என்பது யாருக்கும் தெரியாது . விஞ்சானிகள், அரசியல் சட்டத்தில் உள்ளவர்கள் தட்டிக்கழிக்க, தங்கள் தன்மானம் காக்க தடுப்பூசியில் உள்ள தீயவற்றை கூறமாட்டார்கள். விஞ்சான மூடத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். தடுப்பூசி இல்லாமலேயே , மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே பாதிக்கும் மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமாகியுள்ளது .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
29-மே-202121:51:04 IST Report Abuse
Tamilan இப்படி உலகளாவிய வியாபாரிகளின் விளம்பரப்பலகையாக இருப்பதற்கு ஒரு சுகாதார அமைப்பு தேவையா ? அதுவும் உலகளாவிய சுகாதார அமைப்பு தேவையா ?. ஒரு குறிப்பிட்ட சில நாடுகளின் ஊதுகுழலாக, அந்நியர்களின் எடுபிடிகளாக இருக்கும் ஒரு அமைப்பு இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவையா ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X