புதுடில்லி: 'மாநில அரசுகளுக்கு கிடைக்காத தடுப்பூசி தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'மாநில அரசுகளின் தடுப்பூசி டெண்டர்களுக்கு உற்பத்தியாளர்கள் கையை விரிக்கிறார்கள். ஆனால், தனியார் கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி பெற்று போடப்போகிறோம் என்கிறார்கள். தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் தனியார் கம்பெனிகளுக்கு எப்படி கிடைக்கிறது' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் தனியார் கம்பெனிகளுக்குக் கிடைக்கிறது. அது எப்படி?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 29, 2021

நாடு முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டுள்ளனர். ஆனால், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகளுக்கு எந்த பதில்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.