வெத்துப் பேச்சு: பிரதமரை அவமதித்ததை ஒப்புக்கொள்ளாமல் மம்தா

Updated : மே 30, 2021 | Added : மே 29, 2021 | கருத்துகள் (81+ 97)
Share
Advertisement
கோல்கட்டா:புயல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்ததை ஒப்புக் கொள்ளாமல், பிரச்னையை திசை திருப்பும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெத்துப் பேச்சுபேசி வருகிறார். ''அரசியல் ரீதியில் பழிவாங்கும் செயல்,'' என, மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராகஆவேசமாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட
 வெத்துப் பேச்சு,பிரதமர், அவமதிப்பு,  மம்தா

கோல்கட்டா:புயல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்ததை ஒப்புக் கொள்ளாமல், பிரச்னையை திசை திருப்பும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெத்துப் பேச்சுபேசி வருகிறார். ''அரசியல் ரீதியில் பழிவாங்கும் செயல்,'' என, மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராகஆவேசமாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமைச் செயலரைதிரும்பத் தரும்படியும் கெஞ்சியுள்ளார்.

'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். ஒடிசாவில் முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்குடன் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.அதன்பின் மேற்குவங்கத்துக்கு வந்த பிரதமர் மோடி, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்தார்.


கண்டனம்

மோடியை விமான நிலையத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை மட்டும் அளித்து, வேகமாக நடையைக் கட்டி விட்டார். இவ்விவகாரத்தில், பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்ததாக, பா.ஜ., தலைவர்கள், மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை மம்தா மறுத்ததோடுஅல்லாமல், மோடி தான் தன்னைக் காக்க வைத்தார் எனக் கூறி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்கையில், மேற்கு வங்க தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாய், மீண்டும் மத்திய அரசு பணிக்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.இது குறித்து மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ஏற்க முடியவில்லை. அதனால், நான் மீண்டும் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் தலைமைச் செயலர் என்ன தவறு செய்தார்? கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை மாற்றியுள்ளது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.பிரதமர் கூட்டத்தை நான் புறக்கணித்து அவமதித்ததாக ஜோடிக்கப்பட்ட ஒருதலைபட்சமான கதைகளை பா.ஜ., கூறி வருகிறது.

என்னை இப்படி அவமதிக்க வேண்டாம். அரசியல் ரீதியில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்திருந்தது. கவர்னர் ஜகதீப் தன்கர், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை அவர் அழைத்திருந்தார். ஆனால் ஒடிசா, குஜராத்துக்கு சென்றபோது இவ்வாறு செய்யவில்லை.வறட்டு கவுரவம் அடங்கும் என்றால், பிரதமரின் காலில் கூட விழத் தயாராக உள்ளேன். மேற்கு வங்க மக்களுக்காக இதைச் செய்வேன். தலைமைச் செயலரை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


பொய் குற்றச்சாட்டு

இது குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை விசாரிக்க சி.பி.ஐ., முயற்சித்தது. அப்போது, சி.பி.ஐ., அலுவலகத்துக்கு சென்று சாலை மறியலிலும், தர்ணாவிலும் மம்தா ஈடுபட்டார். மோசடி வழக்கில் திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் உட்பட நான்கு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

அப்போதும், சி.பி.ஐ., அலுவலகம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்நிலையில் தற்போது தலைமைச் செயலரை திரும்பப் பெற்றதை எதிர்த்து, மம்தா குரல் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி நடத்திய ஆய்வு கூட்டத்தில் பங்கேற்காமல்புறக்கணித்துள்ளார்; அதற்காக அவர் கூறியவிளக்கமும் ஏற்புடையதாக இல்லை.அரசியல் மற்றும் அரசு நிர்வாக முதிர்ச்சி இல்லாமல் வெத்து பேச்சுகளை பேசி வருகிறார். ஆனால், அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக பிரதமர் மீது பொய் குற்றச்சாட்டைகூறியுள்ளார். க்ஷ

மேற்கு வங்கத்துக்கு செல்வதற்கு முன், ஒடிசாவுக்கும் மோடி சென்றார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அரசியல் ரீதியில் மோடி, அமித் ஷாவை பிடிக்காவிட்டாலும், அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள நாட்டின் உயர் பதவியில் உள்ளவரை புறக்கணிப்பது, தன் மாநில மக்களின் நலனைப் புறக்கணிப்பது போல் என்பதை மம்தா உணரவில்லை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


'ஆணவப் போக்கு!'

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்ததலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது:மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க, தனியாக ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன், விமான நிலையத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரை பிரதமர் சந்தித்தார்.

இதில் என்ன தவறு உள்ளது? அந்த சந்திப்பு அறைக்குள் நுழைந்த மம்தா பானர்ஜி, கோரிக்கை மனுவை பிரதமர் கையில் திணித்துச் சென்றுவிட்டார். அப்போது தலைமைச் செயலரும் உடனிருந்தார். ஆய்வுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்காதது, மம்தாவின் ஆணவப் போக்கையே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (81+ 97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-202121:39:12 IST Report Abuse
Mahendran வெகு விரைவில் மோடியை மம்தா வீழ்த்துவார்
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-202121:19:33 IST Report Abuse
Nepolian S சிங்கப்பெண்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
30-மே-202121:07:36 IST Report Abuse
s t rajan இந்த அம்மாவை mental hospital இல் சங்கிலியால் கட்டிப் போடுங்கய்யா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X