ஆள் இல்லாத கிராமத்தில் விவசாயம்: அசத்தும் பட்டதாரி இளைஞர்

Added : மே 30, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
அருப்புக்கோட்டைநன்கு படித்து நல்லதொரு பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து 'செட்டில்' ஆவது இன்றைய இளைஞர்களின் கனவு. இதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவதில் பெரும்பாலான இளைஞர்கள் உள்ளனர்.இவர்களை போல் நன்கு படித்து நல்லதொரு வேலை கிடைத்து வெளி நாட்டில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு பெற்ற 23 வயதான ஒரு கிராமத்து இளைஞர் விவசாயம் மீதான
ஆள் இல்லாத கிராமத்தில் விவசாயம்: அசத்தும் பட்டதாரி இளைஞர்

அருப்புக்கோட்டைநன்கு படித்து நல்லதொரு பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து 'செட்டில்' ஆவது இன்றைய இளைஞர்களின் கனவு. இதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவதில் பெரும்பாலான இளைஞர்கள் உள்ளனர்.

இவர்களை போல் நன்கு படித்து நல்லதொரு வேலை கிடைத்து வெளி நாட்டில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு பெற்ற 23 வயதான ஒரு கிராமத்து இளைஞர் விவசாயம் மீதான நாட்டத்தால் வேலையை விட்டு விவசாயம் செய்து வருகிறார் அருப்புக்கோட்டை அருகே சந்தையூரை சேர்ந்த கற்குவேல்.

ஓட்டல்மேனேஜ்மென்ட் படித்து விட்டு மும்பையில் 'ஐடிசி மராத்தா' ஓட்டலில் பணி செய்த பின் வெளி நாட்டில் பணிபுரிய அழைக்கப்பட்டார். ஆனால் இவர் தான் வாழும் கிராமத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் தனது சொந்த கிராமத்திற்கு வந்து விட்டார்.இக்கிராமம் ஒரு காலத்தில் விவசாயம் செழித்து வேளாண் பொருட்களை வெளியூர்களிலிருந்து வந்து வாங்கி செல்லும் மையமாக இருந்துள்ளது. நாளடைவில் வறட்சி, பொய்த்த மழையால் விவசாயம் செய்யமுடியாத நிலையில் கிராம மக்கள் வேறு வேலை தேடி வெளியூர் சென்று விட்டனர்.

தற்போது கிராமத்தில் இரு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இவர்களும் தற்போது வெளி வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில்தான் கற்குவேல் கிராமத்திற்கு வந்து பூர்வீக வீட்டில் தங்கி பூர்வீக விவசாய நிலங்களை உழவு செய்து அகத்தி, வெள்ளரி, சீனி அவரக்காய், கீரைகள் , பயறு வகைகளை பயிரிட்டு அசத்தி வருகிறார். அத்துடன் கோழி, முயல், வாத்து, வெளிநாட்டு எலி, கினி பறவைகளை வளர்த்து வருகிறார்.இயற்கையான சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்வது எனக்கு பிடிக்கிறது என்கிறார் கற்குவேல்.

இவர் மேலும் கூறியதாவது : ரூ. லட்சம் லட்சமாக சம்பாதித்தும் கிடைக்காத மகிழ்ச்சி விவசாயம் செய்வதில் கிடைக்கிறது. என் அப்பா தனியார் மருந்து கம்பெனி பொது மேலாளர். அம்மா, தம்பி உள்ளனர். இவர்கள் மதுரையில் இருக்கின்றனர். அப்பாவிடம் அனுமதி பெற்று நான் இங்கு தங்கி விவசாயம் செய்கிறேன். விவசாயத்தை பெருக்கும் எண்ணத்தில் விவசாய பண்ணை, முதியோர்களுக்கான இல்லம் கட்ட முடிவு செய்துள்ளேன். என்னை பார்த்து இக்கிராமத்திலிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வந்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்,என்றார். இவரை வாழ்த்த 96775 98212 .

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
03-ஜூன்-202118:12:42 IST Report Abuse
Sivak அருமை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ... உங்களை பார்த்து இன்னும் நாலு பேர் உங்களை போல் செய்தால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றி ..
Rate this:
Cancel
Ruban Samuel - Maldives,மாலத்தீவு
02-ஜூன்-202120:02:22 IST Report Abuse
Ruban Samuel விவசாயத்தில் கிடைக்கும் நிம்மதி அலுவலக வேலையில் கிடைக்கவில்லை. விவசாயிகளை கொள்ளுவது வியாபாரிகள் தான். விவசாயிகளுக்கு ஒற்றுமை இருந்தால் விவசாயத்தை லாபகரமாக்கலாம்
Rate this:
Cancel
Anandan P - Chennai,இந்தியா
01-ஜூன்-202111:46:16 IST Report Abuse
Anandan P கற்கவேல் உங்கள் விட முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னொரு புறம் நீர் வளத்தை பெருகுங்கள், கிராமத்திலிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வருவார்கள். நீர் வளம் முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X