பொது செய்தி

இந்தியா

ஒப்பந்தத்தை மீறாத பாக்., : ராணுவ தளபதி வரவேற்பு

Updated : மே 30, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: ''எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது, இந்தியா, பாக்., இடையேயான உறவை புதுப்பிப்பதற்கான முதல்படியாக அமைந்துள்ளது,'' என, நம் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே கூறியுள்ளார்.கடந்த 2003ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி எல்லையில் போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக, இந்தியா - பாக்., ராணுவங்கள், பிப்., 25ல் அறிவித்தன. இது குறித்து, நம் ராணுவத்

புதுடில்லி: ''எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது, இந்தியா, பாக்., இடையேயான உறவை புதுப்பிப்பதற்கான முதல்படியாக அமைந்துள்ளது,'' என, நம் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே கூறியுள்ளார்.



latest tamil news


கடந்த 2003ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி எல்லையில் போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக, இந்தியா - பாக்., ராணுவங்கள், பிப்., 25ல் அறிவித்தன. இது குறித்து, நம் ராணுவத் தளபதி நரவானே கூறியுள்ளதாவது:எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் எந்தவொரு அத்துமீறலும் நடக்கவில்லை. இதனால் ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவுவது மக்களிடையே மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திஉள்ளது. ஆனால் தங்கள் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை பாக்., அழித்ததாக தெரியவில்லை.

எல்லையில் தற்போதுள்ளது போல், போர் நிறுத்தம் மற்றும் ஊடுருவல் நிறுத்தம் தொடர வேண்டும்.இந்த போர் நிறுத்தமானது, இரு நாட்டுக்கும் இடையேயான தடைபட்ட உறவை புதுப்பிப்பதற்கான முதல் படியாக அமைந்துள்ளது.நீண்ட காலத்துக்குப் பின் எல்லையில் அமைதி நிலவுவது, இந்த பிராந்தியத்துக்கே நன்மை பயக்கும்.ஜம்மு - காஷ்மீரிலும் நிலைமை மேம்பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இளைஞர்கள் இணைவது வெகுவாக குறைந்துஉள்ளது.


latest tamil news


விளையாட்டு உள்ளிட்டவற்றில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த போர் நிறுத்தத்தால், எல்லையில் பாதுகாப்பு பணிகளை நிறுத்த மாட்டோம். பயங்கரவாதத்துக்கு எதிரான நம் நடவடிக்கை தொடரும். தன் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்களை பாக்., அழிக்க வேண்டும். வாய்ப்பளிக்கக் கூடாதுஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்தியா, பாக்., எல்லை ஆபத்தான பகுதியாக மாறிவிடுவதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
30-மே-202121:06:26 IST Report Abuse
bal இந்த பாக்கிஸ்தான், நேபால், ஸ்ரீலங்கா மற்றும் சீனாவை நம்பாதீர்கள்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
30-மே-202120:29:47 IST Report Abuse
bal பின்னாடி வெடி வைக்கிறாங்கன்னு அர்த்தம்..இவனுகளையும், நேபாலையும், ஸ்ரீலங்காவையும் நம்பாதீங்க...சீனா பேச்சு கேட்டு கொண்டு ஆடுறானுக..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-மே-202119:12:49 IST Report Abuse
M  Ramachandran ரொமப பெருமை பாட்டுக்கொள்ள வேண்டாம். இப்போது கொராணா தாக்கத்தால் தீவிரவாதிகளை இயக்க பணம் வருவது மற்றும் சிகிச்சைக்கு முடியவில்லை. சரியானவுடன் அவர்கள் பெரும் அளவில் ஆரம்பிக்க திட்டம் மிருக்கும்.நாய் வாலய் நிமிர்த்துவது என்பது இயலாத காரியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X