சீனாவில் திடீரென அதிகரிக்கும் கோவிட் தொற்று; அரசு அதிர்ச்சி

Updated : மே 30, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (51) | |
Advertisement
கங்சோ: சீனாவின் தெற்கு மாகாணமான கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகத்துக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டு தற்போது சீனா படிப்படியாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து

கங்சோ: சீனாவின் தெற்கு மாகாணமான கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.latest tamil news


உலகத்துக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டு தற்போது சீனா படிப்படியாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பகுதியில் வைரஸ் சோதனை மேற்கொண்டபோது 20 புதிய நோயாளிகளுக்கு வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த மாகாணத்தின் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாகாணத்தில் இருந்து மற்ற மாகாணங்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க சீன கம்யூனிச அரசு இந்த மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.


latest tamil news


சுகாதாரத் துறையின் பரிசோதனை முடியும்வரை இந்த மாகாணத்திலிருந்து குடிமக்கள் யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. இந்தியாவில் இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ யாராவது வந்து புதிய வகைப் வைரஸை பரப்பிச் சென்று உள்ளனரா என்று சீன அரசு சந்தேகிக்கிறது.

ஒரு நாளில் சராசரியாக 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கடந்த 6 மாதமாக திறம்பட கையாண்டு வந்த சீனா, அரசு தற்போது இந்த புதிய வைரஸ் தாக்கத்தால் கவலை அடைந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
05-ஜூன்-202112:53:24 IST Report Abuse
madhavan rajan இருப்பது பேருக்கு இந்த ஆர்ப்பாட்டமான? நாங்கெல்லாம் லட்சம் பேருக்கு தொற்று வந்தாலும் நிதானமாக இருக்கிறோம். இங்கு ஊரடங்கு என்றால் அலறுபவர்கள் ஏராளம்.
Rate this:
Cancel
Aalathi - Sathy,செசேல்ஸ்
03-ஜூன்-202117:29:36 IST Report Abuse
Aalathi இந்த வைரஸ் எங்கு தோண்றினாலும், யாரும் இதில் தப்ப முடியாது. ஆனால் சீனா கம்யூனிச கட்டுப்பாட்டால் 1 பில்லியன் மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். அது மட்டுமல்ல, இன்று உலகத்தில் சீனா தான் பத்து சதவீத தோளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜனநாயக இந்தியாவில் இது போர்க்கால அடிஇப்படையில் செய்தாலொழிய, சீனா போன்ற முன்னேற்றத்தைகாணமுடியாது. இங்கேய முன்னேற்றம் மெதுவாகத்தான் நடக்க முடியும். காரணம் இங்குள்ள மதவாதம், கடவுள் நம்பிக்கை, ஜனநாயகம், ல்பல மொழிகள,மற்றும் ஒரு பில்லியனுக்கும் மேலான மக்கள் தொகை. சமுருக இடைவெளி கடைப்பிடிப்பது எளிதான காரியம் அல்ல. தொழிற்சாலைகள் முடங்கிவிட்டன. ஒன்றை கவனிக்க வேண்டும். 1) அமெரிக்கா செனவிந்தியராக்களிக்கொண்ரு தான் இன்று முன்னேறி இருக்கிறது. 2) ஆஸ்திரேலியா இங்குள்ள பள்ளிக்குடியன்றை கொன்று விட்டுத்தான் இன்று அந்தக்கண்டத்தியே தனதாக்கிக்கொண்டது. 3) in India too, British killed so many Indian in the last few enturies, and swindled the resources from India, now amazed all its wealth and business. 4) No Weapons of Mass Destruction in Iran, but Sadaam Husain was captured, brought to justic e and killed. Why? Saddamm Hussain, was not a criminal to other countries, and did not harm other countries. But he was capture by Western countries? 5) சீனா இன்று,விகூர் முல்லிம மக்களை மதவாத கோட்ப்பாடுகளுக்குள் இட்டு செல்லாமல், தன பாதைக்கு, தன நாட்டுர முன்னேற்றத்துக்காக இட்டு செல்கிறது. அமெரிக்கா , ஆஸ்திரேலியிற் மற்றும், பிரிட்டிஷ் அனற்று செய்ததை சீனா தன்னை ஒரு பலமான நாடாக செய்து கொள்கிறது. இது சாத்தியமே. ஓவர்களை இன்று குறை கூறலாம். ஆனால், நாளை இது சரித்திரத்தில் எழுதப்படும். இன்று சினால் முடங்கி விட்டால் உலகம், முடங்கிவிடும். குறைந்த விலையில், இன்று தரமான உற்பத்தி செய்யும் நாடு சீனா ஒன்று தான். ஏன் இந்தியா செய்யக்கூடாது? முடியாது. காரணம், இங்கே ஊழல், அதிக மக்கள் தொகை. எதையும் கட்டுப்படுத்த முடியாது, மெதுவாக முன்னேறலாம். அதற்குள், சீனா எங்கோயோ போய்விடும். இந்தியாவைக்குறை கூறவில்லையா. பல வேற்றுமைகைக்கிடையே, இதன் மக்கள் தொகையை முன்னேற்ற நம்முடையால் அரசியால் அமைப்பு உதவாது.
Rate this:
Cancel
கழுகுப் பார்வை - chennai,இந்தியா
30-மே-202121:28:54 IST Report Abuse
கழுகுப் பார்வை ஆரம்பம் ஆன இடத்தில் தான் சென்று முடியும் என்பது இயற்கை நியதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X