பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மருத்துவமனையில் கவச உடை அணிந்து ஸ்டாலின் ஆய்வு

Updated : மே 30, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
கோவை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். கொரோனா நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் அந்த வார்டு பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்கள் அணியும் கவச உடை (பிபிஇ கிட் ) அணிந்து சென்றார். கடந்த சில நாட்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர்
கோவை, திருப்பூர், ஈரோடு, D.M.K, M.K.Stalin, Stalin, தி.மு.க, ஸ்டாலின்

கோவை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். கொரோனா நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் அந்த வார்டு பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்கள் அணியும் கவச உடை (பிபிஇ கிட் ) அணிந்து சென்றார்.

கடந்த சில நாட்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், இன்று ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கூடுதல்படுக்கை வசதிகளை திறந்து வைத்ததுடன், தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான பணி உத்தரவுகளையும் ஸ்டாலின் வழங்கினார். இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு மதியம, 12:30 மணியளவில், முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார்.

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக், மாவட்டகலெக்டர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து, வெளியே வந்த அவரிடம், கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதில்லை என மக்கள் புகார் மனு அளித்தனர். அதனை ஸ்டாலின் பெற்று கொண்டார்.


latest tamil news



இதன் பின்னர் மாலை 4:40 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் 6:30 மணிக்கு முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-மே-202107:22:57 IST Report Abuse
ravi chandran உலகிலேயே மிக பெரிய சரித்திர சாதனை. எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் தலை எழுத்து.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
31-மே-202107:21:53 IST Report Abuse
Ram விடியோவை பார்த்தால் இவர் எந்த வார்டுக்குள்ளும் நுழைந்து மக்களிடம் பேசியபடி தெரியலையே , அவ்வளவு உயிர் பயம்
Rate this:
G.Prabakaran - Chennai,இந்தியா
31-மே-202110:35:41 IST Report Abuse
G.Prabakaranதினமலர் விடியோவில் உங்களுக்கு அப்படிதான் தெரியும்...
Rate this:
Cancel
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
31-மே-202106:42:59 IST Report Abuse
KALIHT LURA இதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்தால் போதுமே . முதல்வர் தான் செய்யவேண்டுமா . பயங்கர விளம்பரம் ஒரு பிரயோஜனமும் கிடையாது. முழுக்க அரசியல். தவறான முன்னுதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X